ஆந்திராவில் இருந்து உத்தர்காண்ட் சென்ற 81 பேரின் கதி என்ன?
ஹைதராபாத்:உத்தர்காண்ட் மாநிலத்துக்கு சென்ற 81 யாத்ரீகர்களின் நிலை என்னவென தெரியவில்லை என்று ஆந்திர மாநில அரசு அறிவித்துள்ளது.
ஆந்திராவில் இருந்து மொத்தம் 2,785 பேர் உத்தர்காண்ட் யாத்திரைக்காக சென்றிருந்தனர். இவர்களில் 13 பேர் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 10 மாவட்டங்களைச் சேர்ந்த 81 பேர் கதி என்னவென்று தெரியவில்லை என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
ரங்காரெட்டி மாவட்டத்தில் இருந்து 33 பேரும் கிருஷ்ணா மாவட்டத்தில் இருந்து 14 பேரும் ஹைதராபாத்தில் இருந்து 8 பேரும் சித்தூர், விசாகப்பட்டினத்தில் இருந்து தலா 5 பேர், குண்டூர், ஒய்.எஸ்.ஆர். கடப்பா, குண்டூர் மாவட்டங்களில் இருந்து தலா 4 பேர், அனந்தபுர், மேற்கு கோதாவரி மாவட்டங்களில் இருந்து தலா 3 பேர், நிஜாமாபாத் மாவட்டத்தில் இருந்து 2 பேர் ஆகியோர் நிலைபற்றி இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இவர்கள் தொடர்பான தகவல்களை ஆந்திர மாநில் அரசு தமது இணையதளத்தில் புகைப்படங்களுடன் வெளியிட்டுள்ளது. எந்த ஒரு தகவலும் கிடைக்காத இந்த 81 பேரின் குடும்பங்களும் பெரும் துயரத்தில் மூழ்கியுள்ளனர்.
உத்தர்காண்ட்டில் தேசிய பேரிடர் மேலாண்மை மையத்தின் தகவலின்படி 4 ஆயிரம் பயணிகள் வெள்ளத்தில் சிக்கி காணாமல் போயுள்ளனர். ஆனால் அரசு சார்பற்ற நிறுவனமான ஸ்பேர் இந்தியவின் தகவலின்படி 11,600 பேர் காணாமல் போயுள்ளனர் என்று கூறப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications