புத்தகயா குண்டுவெடிப்பு: துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு- என்.ஐ.ஏ அறிவிப்பு
புத்தகயா: புத்தகயாவில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக துப்பு கொடுப்பவர்களுக்கு 10 லட்ச ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று தேசிய புலனாய்வு அமைப்பு அறிவித்துள்ளது.
பீகார் மாநிலம், பாட்னா அருகில் உள்ள புத்தகயா மகாபோதி கோயிலில் கடந்த 7ஆம் தேதி அதிகாலையில் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. 5 புத்த துறவிகள் படுகாயம் அடைந்தனர்.

நாடுமுழுவதும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கிய இந்த சம்பவம் பற்றி தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரணை நடத்தி வருகிறது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு இந்தியன் முஜாகிதீன் என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இதனிடையே, குண்டுவெடிப்பு குறித்து தகவல் கொடுத்தால் ரூ.10 லட்சம் சன்மானம் அளிக்கப்படும் என்று தேசிய புலனாய்வு அமைப்பு இன்று அறிவித்துள்ளது. தகவல் கொடுப்போரின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications