சோலார் பேனல் ஊழல்... நடிகை ஷாலு மேனன் பெண்கள் சிறையில் அடைப்பு!

கேரளாவில் சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் கருவிகளை பொருத்தி தருவதாக கூறி ஏராளமானவர்களிடம் லட்சக்கணக்கான பண மோசடி நடந்துள்ளது. 10000 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாக கூறப்படும் மோசடியில் கேரள முதல்வர் உம்மன்சாண்டி அலுவலகத்துக்கும் தொடர்பு இருப்பதாக வெளியான தகவலால் கேரளாவில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த வழக்கில் பிஜூ ராதாகிருஷ்ணன், சரிதாநாயர் என்ற பெண் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர். மேலும் முதல்வர் அலுவலக உதவியாளர்கள் 3 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த ஊழல் விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் பிஜூ ராதாகிருஷ்ணனுக்கு உதவியதாக கேரள நடிகை சாலுமேனன் மீது புகார் கூறப்பட்டது. இதுதொடர்பாக சாலுமேனன் மீது திருச்சூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். போலீசாரின் தீவிர விசாரணையில் இந்த ஊழல் விவகாரத்தில் நடிகை சாலுமேனனுக்கு முகாந்திரம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து கோட்டயம் அருகே செங்கனாஞ்சேரி வீட்டில் தங்கியிருந்த நடிகை சாலு மேனனை வெள்ளிக்கிழமையன்று போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை போலீசார் அருகில் உள்ள செங்கனூர் என்ற இடத்துக்குக் கொண்டு போய் விசாரணை நடத்தினர்.
இதனையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சனிக்கிழமை முதல் நீதிமன்ற காவலில் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவரை, 3 நாட்கள் வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக் கோர்ட்டு அனுமதி வழங்கியது.புதன்கிழமை மாலையுடன் போலீஸ் காவல் முடிவடைய உள்ள நிலையில் தனக்கு ஜாமீன் கோரி நடிகை லாலு மேனன் திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த திருவனந்தபுரம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications