மும்பை மீது விரைவில் தாக்குதல்: இந்தியன் முஜாஹிதீன் எச்சரிக்கை!
Subscribe to Oneindia Tamil

பீகார் மாநிலம் புத்த கயாவில் அண்மையில் நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்துக்கு பொறுப்பு ஏற்பதாக இந்தியன் முஜாஹிதீன் அமைப்பு அறிவித்திருக்கிறது. அந்த அமைப்பின் ட்விட்டர் பக்கத்தில், புத்த கயாவில் 9 வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தது நாங்களே என்று பதிவிடப்பட்டிருக்கிறது.
இதேபோல், எங்களது அடுத்த இலக்கு மும்பை நகரம்தான். உங்களால் முடிந்தால் தடுக்கலாம். 7 நாட்களுக்குப் பின்னர்....என்று பதிவிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ட்விட்டரிடம் இந்திய முஜாஹிதீன் பெயரில் யார் பதிவு செய்திருப்பது? பதிவு செய்யப்பட்ட கணிணியின் ஐபி எண் என்ன? என்பது உள்ளிட்ட விவரங்களைக் கோரியுள்ளது.
உண்மையில் இந்தியன் முஜாஹிதீன் அமைப்புதான் அந்த பதிவைப் போட்டதா? அல்லது போலியாக யாரும் பதிவிட்டிருக்கிறார்களா? என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications
