For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தர்மபுரியில் 144 தடையை எதிர்த்து திருமா தொடர்ந்த வழக்கில் தமிழக அரசுக்கு கோர்ட் உத்தரவு!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: தர்மபுரியில் அமலில் இருக்கும் 144 தடை உத்தரவை நீக்க கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தொடர்ந்த மனு மீது நாளைக்குள் பதில் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருமாவளவன் சார்பில் வழக்கறிஞர் பிரபாகரன் தாக்கல் செய்த மனுவில், 144 தடை உத்தரவு அரசியல் கட்சித் தலைவர்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டு வருகிறது. நவம்பர் 7ஆம் தேதி சம்பவத்துக்குப் பிறகு தர்மபுரி மாவட்டத்துக்குள் என்னால் நுழைய முடியவில்லை. தர்மபுரி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்காக திரட்டி வைக்கப்பட்டுள்ள நிவாரணப் பொருட்களை பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்க முடியவில்லை.இளவசரன் மரணத்துக்கு அஞ்சலி செலுத்தவும் 144 தடை உத்தரவு தடையாக உள்ளது. 144 தடை உத்தரவு அரசியல் கட்சிகளுக்கு எதிராக சட்ட விரோதமான முறையில் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் 144 தடையை நீக்க கோரியிருந்தார்.

இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் செல்வன், தனபாலன் ஆகியோர் நாளைக்குள் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டனர்.

English summary
The Madras High court senta notice to Tamilnadu Govt. on Thirumavalavan pettion who was challenging 144 order in Dharmapuri
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X