ராமேஸ்வரம்: 3ம் வகுப்பு மாணவியை அடித்து காயப்படுத்திய ஆசிரியை கைது
ராமநாதபுரம்: கையெழுத்து சரியில்லை என்று கூறி 3ம் வகுப்பு மாணவியின் முதுகில் அடித்து காயப்படுத்தியுள்ளார் அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர். அந்த மாணவியின் முதுகுதண்டுவடம் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ராமேஸ்வரம் கரையூரைச் சேர்ந்த சங்கர் என்பவரின் மகள் ஹரிணி. இவர் மண்டபம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் 3ஆம் வகுப்பு படித்து வருகிறார். அந்த சிறுமியின் கையெழுத்து அழகாக இல்லை என்று 4 வரி நோட்டில் தினமும் ஆங்கில வார்த்தைகள் சிலவற்றை வீட்டில் எழுதி வருமாறு ஹரிணியிடம் வகுப்பு ஆசிரியை சுமதி கூறியிருக்கிறார்.ஆனால், .ஹரிணி சரி வர எழுதி வராததால் அவரது முதுகில் மூங்கில் கம்பால் ஆசிரியை அடித்துள்ளாராம்.
இதில், ஹரிணியின் முதுகு தண்டுவடத்தில் காயம் ஏற்பட்டு ரத்தம் வந்துள்ளது. இதை வீட்டில் யாரிடமும் சொல்லக் கூடாது என்று ஆசிரியை மிரட்டியதால் ஹரினியும் தனது பெற்றோரிடம் சொல்லாமல் இருந்துள்ளார்.
இந்நிலையில், இரவு 11 மணியளவில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமி ஹரிணி, தனது முதுகு வலிக்கிறது என்று துடித்துள்ளார். அவரது பெற்றோர் உடனே ஹரினியை ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்துள்ளனர். ஆனாலும் வலி குறையாமல் ஹரினி அழுது கொண்டே இருந்துள்ளார். இதனால், ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஹரினியின் பெற்றோர் கொடுத்த புகாரையடுத்து ராமேஸ்வரம் போலீஸார், ஆசிரியை சுமதி மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications