6 வார உறவு... 1500 பலான மெசேஜ்கள்... 16 வயது மாணவனை சீரழித்த 24 வயது ஆசிரியை
லண்டன்: இங்கிலாந்தில் 16 வயது மாணவனுடன் 6 வாரமாக தகாத உறவு வைத்துக் கொண்டு அவனது பெயரை தனது மார்பில் பச்சைக் குத்தியும், தனது நிர்வாணப் படங்கள் உள்ளிட்டவை அடங்கிய 1500 எஸ்.எம்.எஸ்.களை அனுப்பியும் சிக்கியுள்ளார் 24 வயது ஆசிரியை ஒருவர்.
அந்த ஆசிரியையின் பெயர் ரோசன்னா லாங்க்லி. இவர் தனது வகுப்பில் படிக்கும் 16 வயது மாணவனை ஆசை காட்டி தனது வலையில் வீழ்த்தினார். அந்தப் பையனுக்கு தனது நிர்வாணப் படங்கள் அடங்கிய எஸ்.எம்.எஸ்., எம்.எம்எஸ்களை அனுப்பினார். கிட்டத்தட்ட 1500 மெசேஜ்களை அவர் இப்படி அனுப்பியுள்ளார்.
மேலும் அந்த மாணவனின் பெயரை தனது மார்பிலும் பச்சை குத்திக் கொண்டார். ஆசிரியை விரித்த வலையில் சிக்கினான் மாணவன். இவர்களது உறவு 6 வாரம் நீடித்தது.
வார இறுதி நாட்களில் லண்டனுக்கு வெளியே கூட்டிச் சென்று உல்லாசமாக இருந்துள்ளார். மேலும் தனது உறவு நீடிப்பதற்காக, நான் உன்னால் கர்ப்பமடைந்துள்ளேன் என்றும் அந்த மாணவனிடம் பொய்யாக சொல்லி வைத்துள்ளார்.
கிட்டத்தட்ட தனது செக்ஸ் அடிமை போல அந்த மாணவனைப் பயன்படுத்தி வந்துள்ளார் அந்த ஆசிரியை. இந்த விவகாரம் வெளியில் தெரியவே போலீஸார் அந்த ஆசிரியையை கைது செய்து வழக்குப் போட்டனர்.
கோர்ட்டில் அவர் மீது விசாரணை நடந்து 8 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இருப்பினும் 2 வருடத்திற்கு இந்தத் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதேசமயம், இனிமேல் இந்த ஆசிரியை, சிறார்களுக்குப் பாடம் நடத்தக் கூடாது என கோர்ட் தடை விதித்து விட்டது.
இந்த ஆசிரியை தனது மாணவர்களை அடிக்கடி வீட்டுக்கு அழைப்பாராம். படம் போட்டுக் காட்டுவதாக கூறி அழைப்பாராம். அப்படிப் போய்த்தான் இந்த மாணவன் சிக்கிக் கொண்டான். ஆசிரியை தனது அறைக்குள் போகும்போது அந்த மாணவனை அழைத்து தனக்கு முத்தம் தரச் சொல்வாராம். அவனும் தருவானாம்.












Click it and Unblock the Notifications