செயற்கைக் காலை கழற்றிக் கொடுக்கச் சொல்லி அட்டூழியம் செய்த விமான நிலைய காவலர்கள்
டெல்லி: மாற்றுத் திறனாளி பெண் ஒருவரை அவமானப்படுத்தி அழ வைத்து வேடிக்கை பார்த்துள்ளனர் டெல்லி விமான நிலைய பாதுகாவலர்கள். சோதனை என்ற பெயரில் அவரது செயற்கைக் காலை கழற்றச் சொல்லி கேடு கெட்டத்தனமாக நடந்துள்ளனர் அந்த அதிகாரிகள்.
சமூக இணையதளங்களில் இந்த செய்தி காட்டுத்தீயாக பரவி மக்களிடையே பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாற்றுத்திறனாளிகளை சமூகத்தில் சிலர் பார்க்கும் பார்வையில் சுத்தம் இல்லை என்பதையே இது காட்டுவதாக உள்ளது.

சுரஞ்சனா கோஷ் ஐகாரா
38 வயதான சுரஞ்சனா கோஷ் ஐகாரா என்பவர் மார்க்கெட்டிங் தொழிலில் ஈடுபட்டுள்ளார். மாற்றுத் திறனாளி. செயற்கைக் கால் பொருத்தியுள்ளார்.

மும்பையிலிருந்து டெல்லிக்கு
இதற்காக மும்பை வந்த அவர் அங்கிருந்து டெல்லிக்கு விமானத்தில் பயணித்தார்.

விமான நிலையத்தில் அவமானம்
டெல்லி விமான நிலையம் வந்து சேர்ந்த அவருக்கு பெரும் சோதனை காத்திருந்தது. பாதுகாப்பு சோதனைக்காக சுரஞ்சனா தடுத்து நிறுத்தப்பட்டார்.

காலை கழற்றிக் கேட்ட அதிகாரிகள்
அவரது உடமைகளைப் பரிசோதித்த அதிகாரிகள், அவர் பொருத்தியிருந்த செயற்கைக் காலையும் சோதனையிட வேண்டும் என்று கூறியதால் சுரஞ்சனா பெரும் அதிர்ச்சி அடைந்தார்.

காதிலேயே போட்டுக் கொள்ளாத காவலர்கள்
அது செயற்கைக் கால் அதைக் கழற்றினால் மீண்டும் பொருத்துவது கடினம் என்று சுரஞ்சனா கூறியும் அதை காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை பாதுகாவலர்கள். கழற்றியே தீர வேண்டும் என்று கூறி விட்டனர்.

அதிகாரிகளுக்கும் அறிவில்லை
இதையடுத்து உயர் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு தனது நிலையையும், கோபத்தையும் வெளிப்படுத்தினார் சுரஞ்சனா. ஆனால் அவர்களும் சோதனையிடுவது எங்களது விதி என்று கூறி விட்டனர். இதையடுத்து அவரது செயற்கைக் காலை கழற்றி எடுத்து சோதனையிட்டனர் பாதுகாவலர்கள்.

தூக்கிக் கொண்டு போய் ஸ்கேன்
அத்தோடு நில்லாமல் அவரை இருக்கையிலிருந்து எழும்ப வைத்து தூக்கிக் கொண்டு போய் இடிடி எனப்படும் வெடிபொருள் இருக்கிறதா என்பதைக் கண்டறியும் ஸ்கேனரிலும் நிறுத்தி சோதனையிட்டு கொடுமைப்படுத்தியுள்ளனர் அந்த அதிகாரிகள்.
கொடுமை!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications