மும்பை நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு!
மும்பை: கனமழையால் மும்பை அன்டாப் மலைப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவுக்கு 5 பேர் பலியாகியுள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. மும்பையில் நேற்று இரவு விடாமல் பெய்த மழையால், அன்டாப் மலையில் வியாழக்கிழமை காலை திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது.
மலை அடிவாரத்தில் குடிசை அமைத்து வசித்து வந்த மக்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிக்கு செல்லும் சாலை மிகவும் குறுகலாக இருந்ததால் தீயணைப்பு வாகனங்கள் செல்ல முடியவில்லை.
இந்த நிலச்சரிவில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். 3 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருந்தது. இந்த நிலையில் மீட்புப் பணிகளின் போது மேலும் 3 உடல்கள் கண்டெடுக்கப்பட்டு அடையாளம் காணப்பட்டன. இதனால் சாவு எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதால், அங்கு வசிக்கும் மக்கள் தங்கள் வீடுகளை காலி செய்ய வேண்டும் என்று சமீபத்தில் அதிகாரிகள் அறிவுறுத்தினர். ஆனால் மாற்று ஏற்பாடுகள் செய்யப்படாததால் இடத்தை காலி செய்யவில்லை என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications