13வது திருத்த விவகாரம். இந்தியா தலையிடக் கூடாது- எச்சரிக்கும் இலங்கை அமைச்சர்!
கொழும்பு: இலங்கை அரசியல் சாசனம் 13வது திருத்தத்தில் மாற்றங்களைக் கொண்டுவரக் கூடாது என்று சொல்லும் அதிகாரம் இந்தியாவுக்கு இல்லை என்கிறார் அந்நாட்டின் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் மகிந்த ராஜபக்சேவின் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார.
இது தொடர்பாக அவர் கூறுகையில், அரசியல் சாசனத்தின் 13வது திருத்தத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவது,புதிய அரசியலமைப்பு மற்றும் மாகாண சபை அமைப்பை பாதுகாப்பது போன்றவை விவாதித்து தீர்மானம் எடுக்கக் கூடிய இடம் நாடாளுமன்ற தேர்வு குழு. இதில் தமிழ்த் தேசி்யக் கூட்டமைப்பு பங்கேற்க வேண்டும்.
இலங்கையின் 13வது திருத்தம் இந்தியாவால் உருவாக்கப்பட்டது. அதனை பாதுகாக்க சொல்லலாம் இந்தியா. ஆனால் திருத்தங்களை மேற்கொள்ளக் கூடாது என்று சொல்லும் அதிகாரம் இந்தியாவுக்கு இல்லை.. அதை நாங்கள் ஏற்க முடியாது. இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் இதை நேரிடையாக சொல்ல முடியாது. இலங்கை அரசுதான் அனைத்தையும் தீர்மானிக்கும் என்றார்.












Click it and Unblock the Notifications