குண்டர் சட்டத்தில் நடிகை லீனா - சுகாஷ்! - போலீசார் ஆலோசனை

பெங்களூரை சேர்ந்தவர் சுகாஷ் சந்திரசேகர ரெட்டி அம்பத்தூர் மற்றும் சேலையூரில் உள்ள வங்கிகளுக்கு வி.ஐ.பி., குரலில் பேசி ரூ 20 கோடிக்கும் மேல் மோசடி செய்தார். இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்தனர். முதலில் சுகாஷ் சந்திரசேகர ரெட்டியின் காதலியான மலையாள நடிகை லீனா மரியா பாலை கைது செய்தனர். பின்னர், சுகாஷ் சந்திரசேகர ரெட்டியை கைது செய்துள்ளனர்.
லீனா புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.
சுகாஷையும் இப்போது அதே சிறையில் அடைத்துள்ளனர். வரும் 15-ந்தேதி காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். இதற்காக வரும் 15-ந் தேதி தாம்பரம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.
மேலும், சுகாஷ் சந்திரசேகர ரெட்டியும், லீனா மரியாபாலும் பலரை மோசடி செய்துள்ளதால், அவர்கள் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் வைக்க போலீசார் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications