சென்னை: உறவுப் பெண்ணுடன் பார்க்கில் பேசியவருக்கு கழுத்தில் கத்திக் குத்து....!
சென்னை: உறவுக்காரப் பெண்ணுடன் பூங்காவில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த வாலிபரை அவரது உறவினரும், நண்பரும் சேர்ந்து கழுத்தில் கத்தியால் குத்தி அறுத்து விட்டுத் தப்பிய செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வியாசர்பாடி, சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் 27 வயதான முத்து. இவர் 2 நாட்களுக்கு முன்பு தனது வீட்டுக்கு அருகே உள்ள பூங்காவில் அமர்ந்து தனது உறவுக்காரப் பெண் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென இரண்டு பேர் அங்கு வந்தனர். அவர்கள் முத்துவை சரமாரியாக தாக்கினர். பின்னர் கழுத்தில் கத்தியால் குத்தி அறுத்து விட்டுத் தப்பினர்.
ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த முத்துவை அங்கிருந்தவர்கள் மீட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸாரும் விரைந்து வந்தனர். தனது உறவினரான பிரகாஷ் என்பவரும், அவரது நண்பரும் சேர்ந்துதான் தன்னைத் தாக்கி குத்தியதாக முத்து வாக்குமூலம் அளித்தார்.
போலீஸார் வழக்குப் பதிவு செய்து இருவரையும் தேடி வருகின்றனர். முத்துவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
-
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications