என்.எல்.சி. பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை!

என்.எல்.சி.யின் 5% பங்குகளை விற்பனை செய்யக் கூடாது என்பதை வலியுறுத்தி 11வது நாளாக ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 150 தொழிலாளர்கள் இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தையும் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் திடீரென என்.எல்.சி. நிர்வாகத்துக்கு மத்திய நிலக்கரி துறை அமைச்சகம் ஒரு கடிதத்தை இன்று காலை அனுப்பி வைத்தது. அதில் அங்கீகரிக்கப்பட்ட 24 என்.எல்.சி. தொழிற்சங்கங்களை பேச்சுவார்த்தைக்கு வர அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து நெய்வேலி என்.எல்.சி. நிர்வாக அலுவலகத்தில் இன்று முற்பகல் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இப்பேச்சுவார்த்தையில் போராட்டத்தைக் கைவிடுமாறு என்.எல்.சி. நிர்வாகம் கேட்டுக் கொண்டது. ஆனால் அனைத்து தொழிற்சங்க அமைப்பினருடனும் கலந்து பேசிய பிறகுதான் எந்த ஒரு முடிவும் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் எந்த ஒரு முடிவும் எடுக்கப்படாமலேயே பேச்சுவார்த்தை முடிவடைந்தது.












Click it and Unblock the Notifications