ஏற்காடு தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., பெருமாள் மாரடைப்பால் மரணம்

ஏற்காடு (எஸ்.டி.) தொகுதியில் கடந்த 1989-ம் ஆண்டில் அதிமுக ஜெயலலிதா அணி சார்பில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பெருமாள், கடந்த 1991 - 1996 வரையிலான காலகட்டத்திலும் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக பதவி வகித்துள்ளார். கடந்த 2011 தேர்தலில் திமுக வேட்பாளர் சி.தமிழ்ச்செல்வனை எதிர்த்துப் போட்டியிட்ட பெருமாள், சுமார் 37,500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3-வது முறையாக எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டார்.
பாப்பநாயக்கன்பட்டியில் உள்ள தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பெருமாளுக்கு இன்று அதிகாலை திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக சேலம் 5 ரோடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர்.
ஏற்காடு எம்.எல்.ஏ. மறைந்த தகவலைக் கேள்விப்பட்டதும் நெடுஞ்சாலைகள், சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் மருத்துவமனைக்கு சென்று மறைந்த எம்.எல்.ஏ.வின் உடலுக்கு மரியாதை செலுத்தினர். இதையடுத்து அவரது உடல் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த பெருமாளுக்கு பி.சரோஜா என்ற மனைவியும் ராஜேஷ் கண்ணா, சுரேஷ் கண்ணா, சதீஷ், கார்த்திக் ஆகிய மகன்களும் உள்ளனர்.
ஆத்தூர் வட்டம் தும்பல் அருகேயுள்ள பாப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பெருமாள், கடந்த 1977-ம் ஆண்டு முதல் அதிமுகவில் இருந்து வந்தார். சேலம் கிழக்கு மாவட்ட அதிமுக துணை செயலர், ஏற்காடு தொகுதி செயலர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகள் வகித்து வந்துள்ளார்.
நேரில் அஞ்சலி செலுத்துகிறார் ஜெ.
பெருமாள் மறைவுத் தகவல் கிடைத்ததும், கொடநாட்டில் முகாமிட்டிருக்கும் முதல்வர் ஜெயலலிதா, அங்கிருந்து பாப்பநாயக்கன் பட்டிக்குப் புறப்பட்டுச் சென்றார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications