For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நெய்வேலி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவிகள் மயக்கம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

நெய்வேலியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவிகள் மயக்கம்.

நெய்வேலி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் பதற்றம் எழுந்துள்ளது.

நெய்வேலி என்.எல்.சி. மகளிர் பள்ளியில் இன்று மதிய உணவு சாப்பிட்ட மாணவிகளுக்கு சிறிது நேரத்தில் வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதனால் அவர்கள் அனைவரும் உடனடியாக என்.எல்.சி. மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

TN: 106 students fall ill after eating mid-day meal

மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் நெய்வேலியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள மாணவிகள் நலமுடன் இருப்பதாக கடலூர் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

பீகார் மாநிலத்தில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகள் 27 பேர் உயிரிழந்தனர். மேலும் பல குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல் மதுபானியில் உள்ள ஒரு பள்ளியிலும் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் தமிழகத்திலும் அதேபோன்ற சம்பவம் நடந்துள்ளது பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

English summary
More than 106 students are reported to have fallen ill after consuming mid-day meal at a school in Neyveli.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X