காகம் கொத்தியதில் விரக்தி: சனி பகவானுக்கு அஞ்சி விஷம் குடித்த எஞ்ஜினியர்
பெங்களூர்: பெங்களூரில் தலையில் காகம் கொத்தியதால் விரக்தியடைந்த சாப்ட்வேர் எஞ்ஜினியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகமாநிலம் கதக் மாவட்டம் லக்ஷ்மேஸ்வரா பகுதியை சேர்ந்தவர் விருபாட்சா. இவரது மகன் ஆனந்த் (23). பெங்களூர் எச்ஏஎல் நிறுவனத்தில் பயிற்சி பொறியாளராக வேலை பார்த்து வந்தார். பெங்களூர் அருகே வாடகை வீட்டில் தனது தம்பியுடன் வசித்து வந்தார்.
இரு தினங்களுக்கு முன்பு காலையில் வேலைக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து வெளியே வந்தபோது காகங்கள் அவரை துரத்தி தலையில் தாக்கின. தொடர்ந்து இரண்டு நாட்களாக இப்படி நடந்ததால் வருத்தம் அடைந்த ஆனந்த், ஜோதிடர் ஒருவரிடம் சென்று விளக்கம் கேட்டுள்ளார்.
அதற்கு அவர், சனி பகவான் பிடிக்க விரட்டுவதாகவும், சனி பிடித்தால் விடாது, ஏழரை ஆண்டுகளுக்கு தொடர்ந்து வீட்டில் கஷ்டங்கள் ஏற்படும் என்றும், அவரது தாய் தந்தையின் உயிருக்கே ஆபத்தாக முடியும் என்று பயமுறுத்தியுள்ளார்.
இதனால் வருத்தமடைந்த ஆனந்த், இந்த தகவலை தனது தாய்க்கு போனில் தெரிவித்துள்ளார். ஜோதிடர் சொல்வது போல ஒன்றும் நடக்காது தைரியமாக இரு என்று அவரது தாயார் ஆறுதல் கூறினார்.
ஆனாலும் சமாதானம் அடையாத ஆனந்த், தன்னால்தான் தந்தைக்கு உடல்நிலை பாதித்துள்ளது என கருதி, நேற்று முன்தினம் நள்ளிரவு வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
காகம் கொத்தியதற்காக உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications