பாஜக பிரமுகர் கொலை: தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்த பா.ஜ.க.வினர் கைது
சென்னை: சேலத்தில் பா.ஜ.க. மாநில செயலாளர் ரமேஷ் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து, சேலம், திருப்பூர் தென்காசியில் ஆர்பாட்டம் நடைபெற்றது. விழுப்புரத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய பா.ஜ.க.வினரை போலீசார் கைது செய்தனர்.
சேலத்தில் நேற்று இரவு பா.ஜ.க. மாநில செயலாளர் ரமேஷ் சில மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதனைக் கண்டித்து சேலத்தில் அங்கு முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. முக்கிய வர்த்தகப்பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு இல்லை. எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஆத்தூர் அருகே தம்மம்பட்டியில் கடைகளில் கருப்புக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. இதேபோல் திருச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பா.ஜ.க வினர் சிந்தாமணி அண்ணாசிலை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஈரோடு திருப்பூரில் கடையடைப்பு
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஈரோடு பேருந்து நிலையம் அருகில் ஐம்பதிற்கும் மேற்பட்ட பா.ஜ.க வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூரிலும் இன்று வர்த்தக பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

விழுப்புரத்தில் தடை
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பா.ஜ.க.வினர் கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று காலை ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி இல்லை என்று போலீசார் கூறியதையும் மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர், சாலையில் படுத்து கொண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் சென்னை, திருச்சி நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சுமார் 50க்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினரை போலீசார் கைது செய்தனர்.

தென்காசியில் மறியல்
தென்காசியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பழைய பேருந்து நிலையம் முன்பு
மாவட்ட பாரதிய ஜனதாக் கட்சியின் தலைவர் குமரேச சீனிவாசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டமும்,பஸ் மறியலும் நடைப்பெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் தொடர்ந்து ஹிந்து மதத்தினர் தாக்கப் பட்டு வருவதற்குப் பொறுப்பேற்று தமிழக அரசு ராஜினாமா செய்யவேண்டும்,தமிழகத்தில் கவர்னர் ஆட்சியை அமல் படுத்த வேண்டும்.என்பன உள்ளிட்ட பல்வேறு கோஷங்கள் எழுப்பப் பட்டன. பின்னர் 50க்கும் மேற்ப்பட்டோர் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.அவர்களை போலீசார் கைதுசெய்தனர்.

போலீஸ் பாதுகாப்பு
பாஜக பிரமுகர் படுகொலையைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்பாட்டம் நடைபெற்றதை ஒட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications