சென்னை: ஆன்–லைன் வர்த்தகம் மூலம் ரூ.2 கோடி சுருட்டிய தாய்–மகள் கைது
சென்னை: ஆன்லைன் வர்தகத்தில் பணம் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறி முதலீட்டாளர்களிடம் ரூ.2 கோடி வரை சுருட்டிய சென்னையைச் சேர்ந்த இரண்டு பெண்களை போலீசார் கைது செய்தனர்.
சென்னை வடபழனி, சாலிகிராமம் அழகிரி நகரைச் சேர்ந்தவர் ராஜராஜேஸ்வரி (வயது 33). இவர் தனது தாயார் லதாவுடன் சேர்ந்து ஆன்லைன் வர்த்தகம் செய்து வந்தார். ஆன்லைன் வர்த்தகத்தில் பணம் முதலீடு செய்தால், 25 சதவீதம் லாபம் கிடைக்கும் என்று, ராஜராஜேஸ்வரி விளம்பரப்படுத்தி வந்தார்.
இதை நம்பி நெல்லை மாவட்டம் தென்காசியைச் சேர்ந்த கோமதி என்பவர் ரூ.33 லட்சம் ஆன்லைனில் முதலீடு செய்தார். ஆனால் அந்த பணத்திற்கு லாபத்தொகையும் கொடுக்கவில்லை. ரூ.33 லட்சம் பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை.
இதனால் கோமதி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். இந்த புகார் மனு மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வளர்மதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
ஆன்லைன் வர்த்தகம் என்று சொல்லி, ராஜராஜேஸ்வரியும், அவரது தாயார் லதாவும் மோசடி வர்த்தகம் செய்திருப்பது கண்டறியப்பட்டது. இதன்பேரில் அவர்கள் இருவரும் நேற்று கைது செய்யப்பட்டனர்.
இதுபோல் மேலும் பலரிடம் ரூ.2 கோடி வரை சுருட்டி இருப்பதாக புகார்கள் வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
-
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக்












Click it and Unblock the Notifications