ஆஸ்திரேலியாவில் இந்திய தொழிலதிபர் கொலை!
Subscribe to Oneindia Tamil
சிட்னி: ஆஸ்திரேலியாவில் இந்திய தொழிலதிபர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் அங்கு வாழும் இந்தியர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.
இந்தியாவைச் சேர்ந்த ஷியாம் தோடி, ஆஸ்திரேலியாவில் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அந்த நிறுவனத்தை திவால் ஆன நிறுவனம் என ஆஸ்திரேலிய பங்கு வர்த்தக பரிவர்த்தனை கழகம் அறிவித்தது.
கடந்த மார்ச் மாதம் 26ந் தேதி அடையாளம் தெரியாத ஒருவன் தன்னை கொலை வெறியுடன் தாக்கியதாக ஷியாம் தோடி போலீசில் புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில் தமது வீட்டு படுக்கையில் மர்மமான முறையில் ஷியாம் கொல்லப்பட்டு இருந்ததை அவரது மனைவி கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
அவர் எப்படி கொலை செய்யப்பட்டார்? எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது தொடர்பாக ஆஸ்திரேலியா போலீசார் விசாரணை நடத்தி வருகின்ற்னார்.












Click it and Unblock the Notifications