புகலிடம் தேடி இனி வராதீர்கள்... இங்கு இடமில்லை: ஆஸ்திரேலியா பிரதமர் அறிவிப்பு
வெளிநாடுகளில் இருந்து ஆஸ்திரேலியாவிற்கு அகதிகளாக வருபவர்களுக்கு இனி ஆஸ்திரேலியாவில் இடமில்லை என்று ஆஸ்திரேலியா பிரதமர் கெவின் ருட் தெரிவித்துள்ளார். புகலிடம் தேடி வருபவர்கள் அனைவரும் இனிமேல் அண்டை நாடான பபுவா நியூ கினியாவிற்கு அனுப்பப்படுவார்கள் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
இலங்கை, ஈரான், ஈராக் மற்றும் ஆப்கனிஸ்தானில் இருந்து மறுவாழ்வு தேடும் பல அகதிகள் முதலில் தேர்ந்தெடுப்பது ஆஸ்திரேலியா தான். இவ்வாறாக வரும் அகதிகளுக்கு புகலிடமாக இருந்த ஆஸ்திரேலியாவில் இனிமேல் அகதிகளுக்கு இடமில்லை என அந்நாட்டின் பிரதமர் கெவின் ருட் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

பிராந்திய குடியமர்த்தல் தொடர்பான மிக முக்கியமான ஒப்பந்தம் ஒன்று ஆஸ்திரேலியா மற்றும் பப்புவா நியூ கினியா நாட்டின் தலைவர்கள் இடையே கடந்த வெள்ளியன்று கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தின் படி ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவுகளில் அடைக்கலம் தேடி வரும் அகதிகள் அனைவரும் ஐ.நா., சபையின் அகதிகள் கூட்டமைப்பின் ஒரு அங்க நாடாக இருக்கும் பப்புவா நியூ கினியாவிற்கு அனுப்பப்படுவர் அவ்வாறாக அனுப்பப்படுபவர்களிடமும் முறையான விசாரணை மேற்கொள்ளப்படும். அவர்கள் அகதிகள் என்பது உறுதி செய்யப்பட்டால் அவர்களுக்கு அங்கே தங்க அனுமதி அளிக்கப்படும்.
இதற்காக பப்புவா நியூ கினியாவில் இருக்கும் மனுஸ் தீவுகளில் 3,000 பேரை தங்க வைக்கும் அளவில் அகதிகள் மையம் விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த புதிய ஒப்பந்தத்தின் மூலம் தங்கள் நாட்டில் தஞ்சம் புகும் சாக்கில் சில கடத்தல்காரர்கள் தவறாக ஊடுருவுவது கட்டுப்படுத்தப்படும் என்றும் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
கடந்த 18 மாதங்களில் ஆஸ்திரேலியாவுக்கு படகுகள் மூலம் பயணித்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்ததையடுத்து இந்த முடிவு அவசரமாக எடுக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் அகதிகள் கொள்கையை மாற்றம் செய்யும் வகையில் கெவின் ருட் இந்த முடிவை எடுத்துள்ளார். மேலும், எல்லைப் பாதுகாப்பை பலப்படுத்தும் பொருட்டும், இந்த கெடுபிடிச் சட்டத்தின் மூலம் ஆஸ்திரேலியாவிற்கு படகுகள் மூலம் ஆபத்தான பயணம் மேற்கொள்வது கட்டுப்படுத்தப்படும் என்றும் பிரதமர் ருட் தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications