உலகிலேயே சிறந்த டாக்ஸி நம்ம 'அம்பி'தானாம்...!
டெல்லி: உலகிலேயே சிறந்த டாக்ஸி, அம்பாசடர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எத்தனையோ மாடர்ன் கார்கள் டாக்சிகளாக வலம் வந்தாலும் கூட அதைத் தாண்டி இந்தியாவின் அம்பாசடர் காருக்கு இந்தப் பெருமை கிடைத்துள்ளது.
இங்கிலாந்தைச் சேர்ந்த மோட்டார் மியூசியம் பிலியு என்ற அமைப்பு இந்தத் தேர்வை அறிவி்த்துள்ளது.

எத்தனை போட்டிகள்...
மாருதி சுசுகி, ஹூண்டாய், டொயோட்டா, ஹோண்டா என பல கார்கள் அம்பாசடருக்கு கடும் போட்டியாக உள்ளன.

ஆனால்.. டாப் கியரில் அம்பாசடர்
ஆனால் இந்தக் கார்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளி விட்டு அம்பாசடர் கார் டாக்ஸியே உலகின் சிறந்த டாக்ஸியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிபிசியின் டாப் கியர்
பிபிசி ஒளிபரப்பி வரும் டாப் கியர் என்ற நிகழ்ச்சியில்தான் அம்பாசடர் சிறந்த டாக்ஸியாக தேர்வாகியுள்ளது

உலக டாக்ஸிகளை ஓரம் கட்டி
இங்கிலாந்து, அமெரிக்கா, ஜெர்மனி, தென் ஆப்பிரிக்கா, மெக்ஸிகோ, ரஷ்யா ஆகிய நாடுகளின் டாக்ஸிகளோடு மோதி வென்றுள்ளது இந்தியாவின் அம்பாசடர் என்பது பெருமை தருவதாகும்.

1948ல் பிறந்த அம்பாசடர்
சி.கே.பிர்லா குழுமத்தின் இந்துஸ்தான் மோட்டார்ஸ் லிமிட்டெட் நிறுவனம், கடந 1948ம் ஆண்டு அம்பாசடர் காரை மேற்கு வங்க மாநிலம் உத்தர்பரா என்ற இடத்தில் உற்பத்தி செய்யத் தொடங்கியது.

மாருதி வரும் வரை
மாருதி கார்கள் 80களில் இந்தியாவில் அறிமுகமாகின. அதுவரை அம்பாசடர்தான் இந்திய சாலைகளையும், மக்களின் மனங்களையும் வலம் வந்து கொண்டிருந்தது.

இன்றும் கூட...
இன்றும் கூட அம்பாசடருக்கு மக்களிடையே தனி செல்வாக்கு நிலவுகிறது.

அம்பி அவதாரம்
தற்போது அம்பாசடரில் புதிய மாற்றங்களைச் செய்து அதை அம்பி என்ற பெயரில் மறுபடியும் அறிமுகப்படுதத இந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

மவுசு இருந்தாலும் விற்பனை குறைவுதான்
அம்பாசடருக்கு மவுசு இருந்தாலும் கூட விற்பனை குறைவாகவே இருக்கிறது. கடந்த 2012-13ல் மொத்தமே 3390 அம்பாசடர் கார்கள் தான் வி்ற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications