வீட்டிற்குள் புகுந்த பஸ்: சமையல் செய்து கொண்டிருந்த தாயும், மகளும் பலி: திருப்பூரில் பரிதாபம்

திருப்பூர் பி.என். ரோட்டில் சாந்தி தியேட்டர் அருகில் உள்ள தனியார் பனியன் ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாற்றும் திருப்பூர் பெருமாநல்லூர், பாண்டியன் நகர், கணக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்களை தினமும் கம்பெனிக்கு சொந்தமான பஸ்சில் கம்பெனிக்கு வேலைக்கு அழைத்து வருவது வழக்கம்.
வழக்கம் போல், கடந்த வெள்ளியன்று இரவு சுமார் 7 மணிக்கு வேலை முடிந்த 60 பணியாளைகளை அவர்கள் தம் வீட்டில் கொண்டு போய் விடுவதற்காக பஸ் புறப்பட்டது. பஸ்ஸை டிரைவர் அமல்ராஜ் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். சரியாக திருப்பூர் அண்ணா நகர் பஸ் ஸ்டாப் அருகே பஸ் வந்த போது அதன் கட்டுப்பாட்டை இழந்தது.
இதனால், சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதிய பஸ், அருகில் இருந்த வீட்டிற்குள் நுழைந்தது. இதில் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த வெள்ளியங்கிரி என்பவரின் மனைவிமல்லிகாதேவியும், அவரது இடுப்பில் இருந்த அவர்களது 2 வயது மகள் பவளக்கொடியும் பரிதாபமாக பலியானார்கள்.
அதிர்ஷ்டவசமாக, இந்த விபத்தில் வெள்ளியங்கிரியும் அவரது மகன் வீரமோகனும் லோசான காயங்களுடன் தப்பினர். மேலும், பஸ்சில் பயணம் செய்த 11 தொழிலாளர்கள் லேசான காயமடைந்தனர். இவ்விபத்தில், வெள்லியங்கிரி வீட்டு வாசலில் அமைக்கப்பட்டிருந்த கோழிக்கடையில் அடைக்கப் பட்டிருந்த 20 கோழிகளும் உடல் நசுங்கி பலியாயின.
இக்கோரவிபத்து பற்றி தகவல் அறிந்த பெருமாநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, தாய்-மகள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காயமடைந்த 13 பேரும் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர்.
விபத்தை ஏற்படுத்திய டிரைவர் அமல்ராஜ் தப்பி ஓடி விட்டார். போலீசார் அவரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications