கூடங்குளம் அணு உலையை மூடக்கோரி 25–ந்தேதி வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

கூடங்குளம் அணு உலைக்கு எதிரான வக்கீல்கள் பேரவை சார்பில் வக்கீல்கள் தங்கசாமி, சிவகுமார் ஆகியோர் நெல்லையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தனர்.
அப்போது அவர்கள் கூறுகையில்,
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கடந்த 13-ந்தேதி முதல் மின்உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதி மக்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்காமலும், உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலை செயல்படுத்தாமலும் உண்மைகளை மறைத்தும் முன்னறிவிப்பின்றி அணு உலை திறக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறோம். மேலும் அணுஉலையை உடனே மூட வேண்டும்.
அங்கு போராட்டம் நடத்தியவர்கள் மீது இதுவரை 3250 வழக்குகள் போடப்பட்டுள்ளது. 2 லட்சத்து 10 ஆயிரம் பேர் இந்த வழக்குகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். உதயகுமார் மீது மட்டும் 320 வழக்குகள் போடப்பட்டுள்ளது. எனவே அந்த வழக்குகள் அனைத்தையும் வாபஸ் பெற வேண்டும். அங்கு பாதுகாப்புக்கு போடப்பட்டுள்ள போலீசாரையும் வாபஸ் பெற வேண்டும்.
மேலும் அணு உலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 25-ந்தேதி நெல்லை கோர்ட் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம். தொடர்ந்து மறியல் உள்பட பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும் என்று அவர்கள் தெரிவி்த்தனர்


Click it and Unblock the Notifications
