பிள்ளைக்குச் செலவு செய்ததை விட மதிமுகவுக்கு செலவு செய்யும் தொண்டர்கள் .. வைகோ உருக்கம்
திண்டுக்கல் தன் பிள்ளைக்கு செலவு செய்ததைவிட இந்த கட்சிக்காக செலவு செய்து வளர்த்து வருகிறீர்கள் என்று மதிமுகவினர் குறித்து கட்சி பொதுச் செயலாளர் வைகோ பெருமிதம் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்ட மதிமுக சார்பில் கழக வளர்ச்சி நிதியளிப்புக் கூட்டம், திண்டுக்கல்லில் சனிக்கிழமை நடந்தது.
ரூ.35 லட்சத்து 50 ஆயிரம் கழக நிதியாக திண்டுக்கல் மாவட்ட மதிமுக செயலாளர் என்.செல்வராகவன் மற்றும் கட்சியின் பொறுப்பாளர்கள், கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவிடம் அளித்தனர். பின்னர் வைகோ பேசினார்.

வாளாவிருந்த கருணாநிதி
ஈழ தமிழின படுகொலையை தடுத்திட கோரி தம்பி முத்துக்குமார் தீக்குளித்த போது அன்று முதல்வராக இருந்த கருணாநிதி வாளாவிருந்து விட்டு இன்று டெசோ என்கிறார்.

டெசோ ஒரு ஏமாற்று வேலை
டெசோ ஒரு ஏமாற்று வேலை என்பதை நாட்டு மக்கள் அறிவர்.

20ம் ஆண்டை நோக்கி மதிமுக
மதிமுக 20ஆம் ஆண்டை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. மற்ற மாவட்டங்களை விட இந்த மாவட்டத்தில் தான் நிதி அதிகமாக வழங்கியுள்ளீர்கள்.

மக்கள் கொடுத்த நிதி
இந்த நிதி மக்கள் கொடுத்த நிதி. இது மக்கள் இயக்கம். இந்த இயக்கம் வளர வேண்டும். வைகோ வளர வேண்டும் என்பதற்காக வாரி வழங்கியிருக்கிறார்கள்.

நாடே மடிப்பிச்சை ஏந்தியுள்ளது
நாடே விடுதலைக்காக மடிப்பிச்சை ஏந்தியிருக்கிறது. காந்தி ஒருமுறை மதுரை வந்தபோது, நெடுமாறன் தந்தையார் கையெழுத்து கேட்டுள்ளார். அதற்கு 5 ரூபாய் கொடு கையெழுத்து போடுகிறேன் என்று காந்தி சொன்னார். உடனே தன்னுடைய தங்க மோதிரத்தை கழட்டி கொடுத்தார். அப்போதும்கூட காந்தி உண்மையான தங்கமா என்று கேட்டார். அதன் பிறகு தான் பக்கத்தில் இருந்த ஒருவரிடம் பேப்பர் வாங்கி கையெழுத்துபோட்டு கொடுத்தார்.

அண்ணா காலத்திலும்
அதேபோல் சிங்கப்பூரில் நேதாஜி கலந்து கொண்ட கூட்டத்தில் அங்குள்ள பெண்கள் தங்க செயின் கொடுத்தனர். பெண்கள் தாங்கள் கழுத்தில் மஞ்சள் கயிரை கட்டிக்கொண்டு தங்க தாலியை கொடுத்தார்கள். அண்ணா காலத்தில் கூட கூட்டங்களில் சிறப்பு பேச்சாளர் பேசுவதற்கு முன்பு 'உங்களிடம் துண்டை ஏந்தி வருவார்கள். இயன்ற உதவியை செய்யுங்கள்' என்று சொல்வார்கள். சொன்னதன் பேரில் அவர்கள் கூட்டத்திற்குள் போய் நிதி திரட்டி கூட்ட செலவை ஈடுகட்டுவார்கள். அப்படித்தான் நாமும் மக்களிடம் கேட்கிறோம். நாட்டுக்காக கழகம் செயல்படுகிறது என்ற நோக்கத்தில் மக்களும் வழங்கி வருகிறார்கள்.

சாந்தன், பேரறிவாளன், முருகன் விடுதலைக்காக
சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்பதற்காக, ராம்ஜெத்மலானியை வழக்கறிஞராக வைத்து வாதாடியுள்ளோம். இதற்காக டெல்லி, மும்பை என செல்ல வேண்டியிருந்தது. இதற்கான செலவை கழகம் தான் ஏற்றது.

எத்தனையோ நடைப் பயணங்கள்
கடந்த 20 ஆண்டுகளாக சென்னை, காஞ்சி என எத்தனையோ நடைப்பயணங்கள் சென்றிருக்கிறோம். ஒருமுறை செல்லும் நடைப்பயணத்தை வைத்து ஒரு மாநாடு நடத்திவிடலாம். அந்த அளவுக்கு நான் போகும் இடங்களில் எல்லாம் கட்சியினர் கொடி, தோரணங்களை கட்டி செலவு செய்தார்கள்.

பிள்ளைக்கு செலவு செய்ததை விட
தன் பிள்ளைக்கு செலவு செய்ததைவிட இந்த கட்சிக்காக செலவு செய்து வளர்த்து வருகிறீர்கள் என்றார் வைகோ.
-
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications