செக்ஸ் டார்ச்சர்… கொல்கத்தாவில் ஓடும் ரயிலில் இருந்து குதித்த பெண் எஞ்ஜினியர் படுகாயம்
கொல்கத்தா: பாலியல் தொந்தரவு காரணமாக ஓடும் ரயிலில் இருந்து பெண் எஞ்ஜினியர் ஒருவர் குதித்து படுகாயமடைந்த சம்பவம் கொல்கத்தாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
25 வயதான அந்த பாதிக்கப்பட்ட பெண், பாலி மற்றும் பெலூர் ஸ்டேசன் இடையே ஓடும் ஜனதா எக்ஸ்பிரஸ் ரயிலில் ஞாயிறன்று பயணம் செய்தார். கொல்காத்தாவில் இருந்து 42 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பான்டெல் ஸ்டேசன் வந்த போது அவர் பயணம் செய்த பெட்டி காலியானது.
அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அந்தப் பெட்டியில் ஏறியுள்ளார். தொடக்கம் முதலே அந்தப் பெண்ணை சீண்டியபடி வந்துள்ளார். அருவெறுப்பான பேச்சு பேசிய அந்த நபர், ஒருமணிநேரம் அந்தப் பெண்ணை டார்ச்சர் செய்யவே வெறுத்துப் போன அந்தப் பெண் அவனிடம் இருந்து தப்பிக்க ஓடும் ரயிலில் இருந்து குதித்துள்ளார்.
இதில் அந்தப் பெண்ணின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சம்பவம் நடந்தது பாலி ஸ்டேசன் அருகில் என்பதால் உடனடியாக அந்தப் பெண்ணை காப்பாற்றி அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் மருத்துவ செலவு முழுவதையும் அரசே ஏற்றுக் கொள்ளும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். அந்தப் பெண் கொல்கத்தாவில் ஐ.டி நிறுவனம் ஒன்றில் எஞ்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் பாலியல் தொந்தரவு செய்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.
தொடரும் பாதிப்புகள்
கடந்த சில வாரங்களாகவே ரயில் பயணத்தில் பாலியல் தொடர்பான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. மத்தியபிரதேச மாநிலத்தில் சிபிஆர்எப் ஜவான் ஒருவர் கைது செய்யப்பட்டார். அதேபோல டெல்லி மெட்ரோ ரயிலில் ஃபோர்ன் படங்கள் ஒளிபரப்பாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ஓடும் ரயிலில் இளம்பெண்ணை பாலியல் தொந்தரவு செய்து தற்கொலைக்கு தூண்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications