ஹரியானாவில் வீட்டில் தனியாக இருந்த 8 வயது சிறுமியை கற்பழித்த 17 வயது சிறுவன் கைது
Subscribe to Oneindia Tamil
ஜஜ்ஜர்: ஹரியானாவில் 8 வயது சிறுமியை கற்பழித்த 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டன்.
ஹரியானா மாநிலம் ஜஜ்ஜர் மாவட்டம் ஜகோடா கிராமத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடந்த சனிக்கிழமை இரவு கற்பழித்தான். பக்கத்து வீட்டில் வசிக்கும் சிறுவன் சிறுமி வீட்டில் தனியாக இருந்த நேரம் பார்த்து உள்ளே புகுந்து அவரை கற்பழித்துவிட்டு ஓடிவிட்டான்.
இது குறித்து சிறுமியின் தந்தை அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து அந்த சிறுவனை கைது செய்தனர். இதற்கிடையே மருத்துவ பரிசோதனையில் சிறுமி கற்பழிக்கப்பட்டது உறுதியானது. அந்த சிறுமி அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications