சேலத்தில் தீக்குளித்த பாஜக மகளிர் அணி செயற்குழு உறுப்பினர் ராஜராஜேஸ்வரி மரணம்
சேலம்: சேலத்தில் பாஜக நிர்வாகி ஆடிட்டர் ரமேஷ் கொல்லப்பட்டதை தாங்கிக் கொள்ள முடியாமல் தீக்குளித்த அக்கட்சியின் மாநில மகளிர் அணி செயற்குழு உறுப்பினர் ராஜராஜேஸ்வரி சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
சேலம் மாவட்டம் சின்ன திருப்பதி பாரதி நகரைச் சேர்ந்தவர் ராஜராஜேஸ்வரி(45). பாஜக மாநில மகளிர் அணி செயற்குழு உறுப்பினராகவும், மண்டல மகளிர் அணி தலைவியாகவும் இருந்தார். அவரது கணவர் பாபு. கும்பகோணத்தில் உள்ள மாவட்ட ஆயுதப்படை பிரிவில் இன்ஸ்பெக்டராக உள்ளார். சேலத்தில் பாஜக பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். அவர் கொல்லப்பட்ட அதிர்ச்சியில் ராஜராஜேஸ்வரி சோகமாக காணப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவர் நேற்று காலை தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். உயிருக்கு ஆபத்தான நிலைமையில் இருந்த அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிர் இழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications