பாகிஸ்தான் பயணம்: ஆப்கன் அதிபர் கர்சாய் ‘நிபந்தனைகளோடு’ சம்மதம்

கடந்த 12 வருடங்களாக தாலிபன் கிளர்ச்சியாளர்களால் நடத்தப்படும் வன்முறைகளுக்கு முடிவு கட்டும் விதமாக சமரச பேச்சுவார்த்தை நடத்த ஆப்கானிஸ்தானுக்கு அழைப்பு விடுத்தது பாகிஸ்தான் அரசு.
பாகிஸ்தான் அமைச்சரவையின் மூத்த அமைச்சரும், தற்போதைய வெளியுறவுத்துறை ஆலோசகருமான சர்தாஜ் அஜீஸ், ஆப்கன் வெளியுறவுத்துறை அமைச்சரான ஜல்மாய் ருசுல் உடன் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, அவர் நேரடியாகவும் ஆப்கன் அதிபருக்கு பாகிஸ்தான் வருமாறு நவாஸ் ஷெரீப் அழைப்பு விடுத்தாக தெரிவித்தார். இதற்கு முன்னர், பாகிஸ்தானில் சமீபத்தில் பிரதமராக பதவியேற்ற நவாஸ் ஷெரீப் ஏற்கனவே இரண்டு முறை அழைப்பு விடுத்தது குறிப்பிடத்தக்கது.
இன்று, ஆப்கன் அதிபர் மாளிகையில் இருந்து வெளிவந்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பில், அதிபர் கர்சாய் பாகிஸ்தான் செல்லச் சம்மதித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், நிகழ்ச்சி நிரலில் இருநாடுகளின் சமாதானம், அமைதி குறித்தே முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாம்.












Click it and Unblock the Notifications