பிஜபூர் அருகே பஸ்-கார் பயங்கர மோதல்: 10 வயது சிறுமி உள்பட 18 பக்தர்கள் பலி
பிஜபூர்: கர்நாடகாவில் தனியார் பேருந்தும், காரும் மோதிக் கொண்ட விபத்தில் ஆன்மீக சுற்றுலா சென்ற 18 பக்தர்கள் பலியாகினர்.
மகாராஷ்டிரா மாநிலம் சங்லி மாவட்டத்தைச் சேர்ந்த 20 பேர் குரு பூர்ணிமாவை முன்னிட்டு கர்நாடகாவுக்கு எஸ்யூவி காரில் ஆன்மீக சுற்றுலா வந்தனர். அவர்கள் கனக்பூர், குல்பர்கா ஆகிய இடங்களில் உள்ள கோவில்களுக்கு சென்றுவிட்டு தங்கள் ஊருக்கு திரும்பினர். நேற்று இரவு 2.45 மணிக்கு பிஜபூர் அருகே உள்ள சிக்கா சிந்தகி கிராமத்தில் அவர்களின் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது பிஜபூரில் இருந்து குல்பர்கா நோக்கி சென்ற தனியார் பேருந்து அவர்களின் கார் மீது பயங்கரமாக மோதியது.

இதில் காரில் இருந்த 10 வயது சிறுமி, 3 பெண்கள் உள்பட 18 பேர் பரிதாபமாக பலியாகினர். பலியானவர்களில் 4 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவர்கள் கார் டிரைவர் தேஜப்பா பாண்டுரங் ஷிண்டே(28), நந்தாபாய் சிவாஜி சவான்(45), அசோக் பண்டிட் காம்ப்ளி(40), மஜேந்திர சரகர் ஆகியோரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த விபத்தில் காயம் அடைந்தவர்கள் சந்திரகாந்த் அப்பாஜி ஷிண்டே(35) மற்றும் ததுபா மாருதி சரகர் என்று தெரிய வந்துள்ளது.
இது குறித்து சங்லி எஸ்.பி. திலீப் சாவந்த் கூறுகையில்,
இந்த கோர விபத்து குறித்து பிஜபூர் எஸ்பியிடம் இருந்து எங்களுக்கு தகவல் கிடைத்தது. தகவல் கிடைத்தவுடன் போலீஸ் குழு மற்றும் ஆம்புலன்ஸை சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்தோம் என்றார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications