கோவையில் 7.5 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்த நபர் திருப்பதியில் கைது!
கோவை: கோவையில் நகை வியாபாரிகளிடம் இருந்து 7.5 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்த நபரை திருப்பதியில் போலீசார் கைது செய்தனர்.
கோவை ராஜ வீதியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்த மும்பை நகை வியாபாரிகள் லலித் ஜெயின், மல்ஹீந்தர் சிங்கிடம் இருந்து 7.5 கிலோ தங்க நகைகள் கடந்த 16ஆம் தேதி கொள்ளை அடிக்கப்பட்டது.
இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், லாட்ஜில் தங்கியிருந்த முருகன் என்பவர் திடீரென மாயமானது தெரியவந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீசார், முருகனின் செல்போன் எண்ணை வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் முருகன் ஆந்திரா மாநிலம் திருப்பதியில் இருப்பது போலீசாருக்கு தெரிய வந்தது. அதையடுத்து திருப்பதிக்கு விரைந்து சென்ற போலீசார் அங்கே முருகனை பிடித்து விசாரித்தனர்.
அப்போது தங்கத்தை திருடியதை முருகன் ஒப்புக்கொண்டார். உடனே, அவரை கைது செய்து அவரிடம் இருந்த 7.5 கிலோ தங்க நகைகளை போலீசார் மீட்டனர்.
அடிக்கடி விடுதிகளில் தங்கும் முருகன், தான் தங்கும் விடுதி அறையின் சாவிக்கு டூப்ளிகேட் சாவி போட்டு வைத்துக்கொண்டு, மற்றொரு நாளில் அந்த அறையில் தங்கியிருப்பவர்களின் பொருட்களை திருடுவதை வழக்கமாக கொண்டுள்ளதும் தெரிய வந்திருக்கிறது.
கைது செய்யப்பட்ட முருகன், சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த ஓய்வு பெற்ற காவலரின் மகன் என்பதும் விசாரனையில் தெரிய வந்திருக்கிறது. அவர் தன்னை ஒரு பருப்பு வியாபாரி என கூறி கடந்த ஓரு மாதமாக அந்த விடுதியில் தங்கி இருந்துள்ளார். இதனையடுத்து கைது செய்யப்பட்ட முருகனை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
திருடுபோன ஒரு வாரத்திற்குள்ளாக திருடனை பிடித்து நகை மீட்கப்பட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications