மோடிக்கு விசா தரவே கூடாது..திமுக, காங் உட்பட 12 கட்சிகளின் 65 எம்.பிக்கள் ஒபாமாவுக்கு கடிதம்!!

குஜராத் கலவரத்தைத் தொடர்ந்து நரேந்திர மோடிக்கு அமெரிக்கா விசா தர மறுத்துவிட்டது. தற்போது அமெரிக்காவுக்கு சென்றுள்ள பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங்கோ, அமெரிக்க எம்.பி.க்களிடம் எப்படியும் நரேந்திர மோடிக்கு விசா கொடுக்க வைத்துவிட வேண்டும் என்று லாபி செய்தார்.
ஆனால் 12 கட்சிகளைச் சேர்ந்த 65 இந்திய எம்.பி.க்கள் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு ஞாயிற்றுக்கிழமையன்று மோடிக்கு விசா தரக்கூடாது என்று ஒரு பேக்ஸ் அனுப்பினர். இதில் 25 ராஜ்யசபா எம்.பி.க்களும் 40 லோக்சபா எம்.பிக்களும் கையெழுத்திட்டுள்ளனர்.
இதேபோன்ற ஒரு பேக்ஸ் கடந்த ஆண்டு நவம்பர் 26, டிசம்பர் 5-ந் தேதியன்றும் ஒபாமாவுக்கு இதே 65 எம்.பிக்களால் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அதில், மோடிக்கு விசா வழங்கக் கூடாது என்ற அமெரிக்காவின் முடிவுக்கு நாங்கள் மதிப்பளிக்கிறோம். அந்த கொள்கையை தொடர்ந்தும் அமெரிக்கா கடை பிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.
இக்கடிதத்தில் திமுகவின் கே.பி. ராமலிங்கம், காங்கிரஸின் ராமசுப்பு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன், ஐக்கிய ஜனதா தளத்தில் சபீர் அலி, அலி அன்வர் அன்சாரி உள்ளிட்டோரும் கையெழுத்திட்டுள்ளனர்.
ராஜ்யசபாவின் சுயேட்சை எம்.பி.யான முகமது ஆதீப்பின் முன் முயற்சியிலேயே இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. பாஜக தலைவர் ராஜ்நாத்சிங் அமெரிக்காவில் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு செக் வைக்கும் வகையில்தான் இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications