சர்ச்சைகள்..சங்கடங்கள்... பிரணாப் ஜனாதிபதியாகி ஒரு வருஷம் ஆச்சு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாட்டின் பிரதமராக வேண்டும் என்று 30 ஆண்டுகாலமாக கனவு கொண்டிருந்த மூத்த அரசியல்தலைவரான பிரணாப் முகர்ஜி ஜனாதிபதியாக்கப்பட்டு ஓராண்டாகிவிட்டது. ஆம் கடந்த ஆண்டு ஜூலை 25-ந் தேதியன்று நாட்டின் ஜனாதிபதியானார்.

ஜனாதிபதியாக பொறுப்பேற்று ஓராண்டுவதையொட்டி நாளை டெல்லி ஜனாதிபதி மாளிகையில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ராஷ்டிரபதி பவன் வளாகத்தில் வசிப்போருக்காக பிரணாப் முகர்ஜி பொது நூலகம், விளையாட்டு மைதானம் ஆகியவற்றை பிரணாப் முகர்ஜி திறந்து வைக்கிறார். மேலும் மகாத்மா காந்தியின் வெண்கல சிலை, புதுப்பிக்கப்பட்ட இணையதளங்கள் ஆகியவற்றையும் அவர் திறந்து வைக்கிறார்.

தாம் பதவியேற்று ஓராண்டு ஆகிவிட்ட நிலையில் மாநில ஆளுநர்களுடன் புதியதாக அமைக்கப்பட்டுள்ள வீடியோ கான்பரன்ஸ் அமைப்பு மூலம் நாளை பிரணாப் கலந்துரையாடுகிறார். பின்னர் அமைச்சர்களுக்கு விருந்து அளிக்கிறார்.

இவை சம்பிரதாய நடைமுறைகள்.. அதே நேரத்தில் கடந்த ஓராண்டு காலத்தில் நமது ஜனாதிபதியின் செயல்பாடுகள் எப்படியாக இருந்தன?

மேதகு கிடையாது ஸ்ரீ மட்டும்தான்

மேதகு கிடையாது ஸ்ரீ மட்டும்தான்

ஜனாதிபதியாக பதவி ஏற்றவுடனேயே மேதகு என்ற சொல்லை ஒழித்தார் பிரணாப். குடியரசுத் தலைவர், ஆளுநர் பதவிகளுக்கு முன்பாக மாண்புமிகு' என்ற வார்த்தையையும், பெயருக்கு முன்பாக, இந்திய பாரம்பரியப்படி, ஸ்ரீ' என்றோ, ஸ்ரீமதி' என்றோ குறிப்பிட வேண்டும் என்று உத்தரவிட்டார். இது தமிழகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

கருணை மனு சர்ச்சை

கருணை மனு சர்ச்சை

இதற்கு முன் எந்த ஜனாதிபதியும் தூக்கு தண்டனை கைதிகளின் கருணை மனுக்கள் விவகாரத்தில் இவ்வளவு அவசரம்காட்டி நிராகரித்து தூக்கு மேடையில் நிறுத்தியிருக்கமாட்டார்கள். அப்படி ஒரு வேகத்தில் கருணை மனுக்களை நிராகரித்தார் ஜனாதிபதி.

பெண் உட்பட 14 பேரின் கருணை மனு நிராகரிப்பு

பெண் உட்பட 14 பேரின் கருணை மனு நிராகரிப்பு

ஜனாதிபதியாக பதவி ஏற்றது முதல் 9 மாதங்களில் 14 தூக்கு தண்டனை கைதிகளின் கருணை மனுக்களை நிராகரித்தார் பிரணாப் முகர்ஜி. இதில் சந்தனக் கடத்தல் வீரப்பனுக்கு உதவியவர்கள் என்று கைது செய்யப்பட்டு தூக்கு விதிக்கப்பட்ட 4 தமிழர்களும் அடக்கம். ஹரியானாவைச் சேர்ந்த சோனியா என்ற பெண்ணும் அடங்குவார்.

சங்கர்தயாள் சர்மாவை சமன் செய்தார்

சங்கர்தயாள் சர்மாவை சமன் செய்தார்

முன்னாள் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா தமது 5 ஆண்டுகாலத்தில் 14 கருணை மனுக்களை நிராகரித்தார். ஆனால் பிரணாப் முகர்ஜியோ 9 மாதங்களிலேயே அதை சமன் செய்துவிட்டார். கே.ஆர்.நாராயணன் ஜனாதிபதியாக இருந்த போது ஒரு கருணை மனு கூட நிராகரிக்கப்படவில்லை. அப்துல் கலாம் 1 கருணை மனுவை நிராகரித்தார். பிரதீபா பாட்டீல் 3 கருணை மனுக்களை நிராகரித்திருந்தார். அனைவரையும் விஞ்சும் வகையில் ஜனாதிபதி செயல்பட்டதால் சமூக வலைதளங்களில் ‘தூக்கு தூக்கி' எனவும் விமர்சிக்கப்பட்டார் பிரணாப்.

வரலாறு காணாத முற்றுகை போராட்டம்!

வரலாறு காணாத முற்றுகை போராட்டம்!

இப்படி சர்ச்சையில் சிக்கிய பிரணாப் சங்கடமான நிலைக்கும் தள்ளப்பட்ட சம்பவமும் உண்டு. அதுதான் டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம். இந்த நிகழ்வைத் தொடர்ந்து பல்லாயிரக்கணக்கானோர் பிரணாப் முகர்ஜியின் ராஷ்டிரபதி பவனை முற்றுகையிட பார்லிமென்ட் வளாகம், இந்தியா கேட் பகுதியில் வாரக்கணக்கில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதற்கு முன்பு இப்படி ஒரு பேரெழுச்சி இந்தியாவில் எழுந்திராத நிலையில் அது பிரணாப் முகர்ஜியை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியது.

இவை தவிர ஒரு ஆண்டுகாலத்தில் 23 மாநிலங்களுக்கு பயணம், 16 கல்வி நிறுவனங்களுக்கு பயணத்தையும் பிரணாப் முகர்ஜி மேற்கொண்டிருக்கிறார். அரசியலில் இடைவிடாது பயணித்துக் கொண்டிருந்த பிரணாப் முகர்ஜி ஜனாதிபதியாகி ராஷ்டிரபதி பவனிலேயே வாசம் கொண்டிருப்பது சற்றே கடினமானதாக இருந்தாலும் தொடர்கிறது அவரது பயணம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+