பொதுக்கூட்டங்களுக்கு செல்ல வேண்டும்: முன்ஜாமீன் நிபந்தனையை தளர்த்துங்கள்- விஜயகாந்த் மனு

இது குறித்து அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது,
நாகர்கோவில் நீதிமன்றத்தில் அரசு வழக்குரைஞரைத் தாக்கியதாகத் தொடரப்பட்ட 2 வழக்குகளில், உயர் நீதிமன்ற மதுரைக் கிளை எனக்கு முன்ஜாமீன் அளித்தது. அதில், நாகர்கோவில் நீதிமன்றத்தில் சரணடைந்து தலா ரூ.10 ஆயிரத்துக்கு 2 நபர் சொத்து ஜாமீன் வழங்க வேண்டும் என்றும், சென்னை பெருநகர் தலைமை நீதிமன்றத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
வர இருக்கும் மக்களவைத் தேர்தல் தொடர்பான கட்சிப் பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக நான் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல வேண்டியுள்ளது. என் மீது தமிழகத்தின் பல்வேறு நீதிமன்றங்களில் 23 வழக்குகள் இருப்பதால் அவற்றிலும் ஆஜராக வேண்டியுள்ளது.
சென்னை நீதிமன்றத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை காரணமாக பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்படும். மேலும், நீதிமன்றங்களில் ஆஜராவதிலும் சிக்கல் ஏற்படும்.
எனவே, முன்ஜாமீன் நிபந்தனையை பின்வருமாறு தளர்த்த வேண்டும். நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜராகி இருநபர் ஜாமீன் அளிப்பதற்கு பதில், சென்னை நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீன் அளிக்க உத்தரவிட வேண்டும்.
மேலும், சென்னை நீதிமன்றத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையைத் தளர்த்த வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
இந்த மனு நீதிபதி ஆர். மாலா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனு குறித்து பதில் அளிக்க கால அவகாசம் வேண்டும் என்று அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து வழக்கு விசாரணை வியாழக்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications