For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னையின் பிஸி சாலைகளில் டிராபிக் ஜாமை உருவாக்கிய ‘இறுதி ஊர்வலம்’

Google Oneindia Tamil News

சென்னை: நேற்று மதியம் சென்னை திநகரில் ஆரம்பித்த இறுதி ஊர்வலம் ஒன்று பெசண்ட் நகர் இடுகாட்டை அடைவதற்குள், பல முக்கிய சாலைகள் போக்குவரத்ஹ்டு நெரிசலால் பாதிக்கப்பட்டது.

இது குறித்து கருத்து தெரிவித்த போக்குவரத்து காவலர் ஒருவர் கூறியதாவது, ‘தெற்கு போக் ரோட்டில் ஆரம்பித்த அந்த இறுதி ஊர்வலம் வெங்கட் நாராயணா சாலை, சாமியர்ஸ் சாலை, டிடிகே சாலை வழியாக பெசண்ட் நகரை சென்றடைந்தது. இதற்குள் சாலையில் பெரும் போக்குவரத்து நெரிசல் உண்டானது. அதை சரி செய்வதற்குள் போதும், போதும் என்றாகி விட்டது' எனத் தெரிவித்தார்.

மேலும், அந்த இறுதி ஊர்வலம் கவுன்சிலர் ஒருவரின் தாயாருடையது என்றும், சடலத்துடன் 500 பேர் சென்றதாலேயே இத்தகைய போக்குவரத்து நெரிசல் உண்டானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது போன்ற இறுதி ஊர்வலங்கள் மிகவும் உணர்வுப்பூர்வமான விஷயம் ஆதலால், போலீசாரால் உடனடியாக செயலில் ஈடுபட முடியாமல் போய் விட்டதாகவும், பொதுவாக இது போன்ரு சாலை வழியாக இறுதி ஊர்வலம் செல்வதற்கு திட்டமிடுபவர்கள் முன்கூட்டியே போலீசாரிடம் அனுமதி வாங்கிக் கொண்டால் இது போன்ற தேவையற்ற சிக்கல்களைத் தவிர்க்கலாம் என அந்த போக்குவரத்து ஊழியர் தெரிவித்துள்ளார்.

English summary
CHENNAI: A funeral procession that began in T Nagar caused traffic congestion in several parts of the city on Wednesday afternoon.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X