மதுரையில் பயங்கரம்.. திருடர்கள் சங்கிலியை அறுத்ததில் கழுத்து அறுபட்டு ஆசிரியை மரணம்
மதுரை: மதுரை கோசாகுளம் பகுதியில் இன்று காலை பட்டப் பகலில் இரண்டு வழிப்பறித் திருடர்கள், ஆசிரியை ஒருவரின் மொபட்டை கீழே தள்ளி விட்டு, அவரது கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலியை அறுக்க முயன்றனர். இதில் கழுத்து அறுபட்டு அந்த ஆசிரியை பரிதாபமாக மரணமடைந்தார்.
கோசாகுளம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இந்த கொடூரக் கொலை மற்றும் வழிப்பறிச் சம்பவம்.
மேலபாலசிங்காபுரம் விஷால் நகரைச் சேர்ந்தவர் லூயிஸ் பெர்னார்ட். இவர் ரயில்வேயில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி பெயர் ஜெயராணி. 52 வயதான இவர் ஆசிரியை ஆவார். கோசாகுளம் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் வேலை பார்த்து வந்தார். தினமும் தனது மொபட்டில் பள்ளிக்குச் செல்வது வழக்கம்.
இன்று காலையும் வழக்கம் போல பள்ளிக்குப் புறப்பட்டார் ஜெயராணி. அப்போது அவரைப் பின் தொடர்ந்து இரண்டு பேர் பைக்கில் வந்துள்ளனர். பனங்காடி என்ற இடத்தில் வந்தபோது ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து தங்களது பைக்கால், ஜெயராணியின் மொபட்டை இடித்துள்ளனர். இதில் ஜெயராணி நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
பின்னர் அவரது கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலியை அறுக்க முயன்றனர். ஆனால் ஜெயராணி சங்கி்லியை கெட்டியாக பிடித்துக் கொண்டு குரல் எழுப்பியபடி போராடினார். திருடர்கள் விடவில்லை. பலம் கொண்டு சங்கிலியை பறித்துள்ளனர். இதில் கழுத்து அறுபட்டு விட்டது. ரத்த வெள்ளத்தில் சிறிது நேரத்தில் ஜெயராணி பரிதாபமாக உயிரிழந்து போனார்.
இந்த சம்பவத்தைப் நேரில் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்த திருடர்களைப் பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் தப்பி ஓடி விட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெறும் 2 பவுன் தங்கச் சங்கிலிக்காக ஆசிரியை ஒருவரின் உயிரைப் பறித்த அந்த கொலைகார திருடர்களை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications