அமர்நாத் யாத்திரை பனிலிங்க தரிசனம்: இந்த ஆண்டு 11 யாத்ரீகர்கள் மரணம்!
ஜம்மு: அமர்நாத் யாத்திரை சென்றவர்களில் உடல் நலம் பாதிக்கப்பட்டு இதுவரை 11 பேர் உயிர் இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 28-ஆம் தேதி அமர்நாத் யாத்திரை தொடங்கியது. இந்தாண்டு இதுவரை 3 லட்சத்து 12 ஆயிரம் பேர் அமர்நாத் பனி லிங்க தரிசனம் செய்துள்ளனர். அமர்நாத் யாத்திரை சென்றவர்களில் இதுவரை 11 பேர் மரணமடைந்துள்ளதாக கண்காணிப்புக் குழுவில் உள்ள ஜம்மு கஷ்மீர் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
உயிர் இழந்தவர்களில் 10 பேர் யாத்ரீகர்கள் என்றும், ஒருவர் சேவை புரிந்து வந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 13 வயதுக்கு கீழ் உள்ளவர்கள், 75 வயதுக்கு மேல் உள்ளவர்கள், கர்ப்பிணிகள் ஆகியோர் இந்த யாத்திரையில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் செல்லும் போது மரணம் ஏற்படுகிறது.

காஷ்மீர் பள்ளத்தாக்கில்
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் பனி சூழ்ந்த மலைகளுக்கு நடுவே, இயற்கையாக உருவாகியுள்ள குகை ஒன்றில், தானாக தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க, நாடு முழுவதும் இருந்து, இந்துக்கள் புனித யாத்திரை, மேற்கொள்வது வழக்கம். ஆண்டின் பெரும்பாலான மாதங்கள், பனியால் சூழ்ந்திருக்கும் குகையில், சில மாதங்கள் மட்டுமே, பனி விலகியிருக்கும். அந்த காலத்தில், லட்சக்கணக்கானோர், பனி லிங்கத்தை தரிசிப்பதை, புனிதமாக கருதுகின்றனர்.

பாதுகாப்பான பயணம்
காஷ்மீர் மாநிலத்தின், பகல்ஹாம் மற்றும் பால்டால் ஆகிய இடங்களில் இருந்து, தலா, 7,500 வீதம், தினமும், 15 ஆயிரம் பேர் அமர்நாத்திற்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்படுவர்.

பனிலிங்க தரிசனம்
இந்த ஆண்டு கடந்த ஜூன் 28-ஆம் தேதி அமர்நாத் யாத்திரை தொடங்கியது. இந்தாண்டு இதுவரை 3 லட்சத்து 12 ஆயிரம் பேர் அமர்நாத் பனி லிங்க தரிசனம் செய்துள்ளனர். இதுவரை 11 பேர் மரணமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த கால மரணங்கள்
2011 ம் ஆண்டு யாத்திரை சென்ற 6,35,611 பேரில் 106 பேர் மரணமடைந்தனர்.
கடந்த ஆண்டு அமர்நாத் யாத்திரையாக 6,21,145 யாத்ரீகர்கள் சென்றனர். இவர்களில் 93 பேர் மரணமடைந்தனர். இவர்களில் 42 பேர் சாலை விபத்துக்களில் மரணத்தை தழுவினர்.

மருத்துவ சான்றிதழ்
கடந்த 1996 ம் ஆண்டு அமர்நாத் யாத்திரை சென்ற போது 243 பேர் உயிரிழந்தனர். அதுமுதல் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களும்,13 வயதுக்கு குறைவானவர்களும், 75 வயதிற்கு மேற்பட்டவர்களும், 6 வாரங்களுக்கு அதிகமான கர்ப்பிணிகளும் யாத்திரை செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்களின் சான்றிதழ் பெற்றவர்களுக்கு மட்டுமே யாத்திரை செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது.

ரக்ஷா பந்தன் தினத்தில்
ரக்ஷா பந்தன் தினமான ஆகஸ்ட் 21-ஆம் தேதியுடன் அமர்நாத் யாத்திரை முடிவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 6 லட்சத்து 21 ஆயிரம் பேர் தரிசனம் செய்தனர்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications