மண்ணில் விளையாடியதற்காக... 6 வயது மகளை ‘கரண்டியால்’ அடித்துக் கொன்ற தாய்
ஹைதரபாத்: ஹைதராபாத்தில் கோபத்தில் தாய் சமையல் செய்யும் கரண்டியால் 6 வயது மகளை அடித்ததில், அச்சிறுமி பரிதாபமாகப் பலியானாள்.
ஐதராபாத்தின் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள சரன்நகரை சேர்ந்த கவுசியா பேகம், இவரது மகள் பர்ஹா பேகம். 6 வயது பர்ஹா, நேற்று பள்ளி முடிந்து வீடு திரும்பியதும், வீட்டிற்கு வெளியே கொட்டப்பட்டிருந்த மணலில் விளையாடச் சென்றிருக்கிறாள்.
மகள் மண்ணில் விளையாடுவதைக் கண்டு ஆத்திரமுற்ற கவுசியா, மகளை வீட்டிற்குள் அழைத்திருக்கிறார்.ஆனால், வர மறுத்திருக்கிறார் பர்ஹா, இதனால் ஆத்திரமடைந்த கவுசியா மகளைக் கரண்டியால் அடித்திருக்கிறார்.
சுற்றி இருந்தவர்கள் தடுத்தும், விடாமல் அடித்திருக்கிறார் கவுசியா. வலி தாங்க முடியாமல் கதறிய பர்ஹா ஒரு கட்டத்தில் மயங்கி விழுந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு தூக்கிச் செல்லப்பட்ட பர்ஹாவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
ஏற்கனவே, உடல் நலக் குறைவால் பாதிக்கப் பட்டிருந்த பர்ஹாவை, கவுசியா தொடர்ந்து அடித்ததே அச்சிறுமியின் மரணத்திற்குக் காரணம் என அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications