கள்ளக்காதலி வீட்டுக்கு வந்த இடத்தில் தகராறு.. கத்தியால் குத்திக் கொன்றார் கள்ளக்காதலர்
அதியமான்கோட்டை: கள்ளக்காதலியின் வீடு தேடி வந்த கள்ளக்காதலருக்கும், அந்தக் கள்ளக்காதலிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. கோபத்தில் காய்கறி நறுக்கப் பயன்படும் கத்தியை எடுத்துக் குத்திக் கொன்றார் காதலர். அவரைப் போலீஸார் கைது செய்தனர்.
அதியமான்கோட்டை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் புனிதா. இவருக்கு வயது 33 ஆகிறது. இரு குழந்தைகள் உள்ளனர். கணவர் ஐயப்பான் 10 வருடத்திற்கு முன்பே இறந்து விட்டார். இதைத் தொடர்ந்து புனிதாவுக்கும், 35 வயதான மணிவண்ணன் என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இருவரும் உல்லாசமாக இருந்து வந்தனர்.
அடிக்கடி புனிதாவின் வீடு தேடி வந்து உல்லாசமாக இருந்து விட்டுப் போவாராம் மணிவண்ணன். இந்த நிலையில் சம்பவத்தன்றும் ஆசையுடன் வந்துள்ளார். வந்த இடத்தில் ஏதோ பிரச்சினையாகியுள்ளது. அப்போது கோபத்தில் காய்கறி நறுக்கப் பயன்படும் கத்தியை எடுத்து சரமாரியாக புனிதாவின் வயிற்றில் குத்தி விட்டார். இதில் புனிதா ரத்த வெள்ளத்தில் துடித்தார்.இதையடுத்து மணிவண்ணன் தப்பி ஓடி விட்டார். மேலும் தனது வீட்டுக்குப் போய் விஷம் குடித்து விட்டார்.
இருவரும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் புனிதா உயிரிழந்தார். மணிவண்ணன் பிழைத்துக் கொண்டார். போலீஸார் அவரைக் கைது செய்து வழக்குப் போட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications