ஆந்திராவை பிரித்து 'ராயல தெலுங்கானா'வை உருவாக்க காங்கிரஸ் முடிவு?

ஆந்திர மாநிலமானது தெலுங்கானா, கடலோர ஆந்திரா, ராயலசீமா ஆகிய மூன்று பகுதிகளாக உள்ளன. தெலுங்கானா தனி மாநிலம் அமைத்தாக வேண்டும் என்பது அரை நூற்றாண்டுகாலமாக நடந்து வரும் போராட்டம். இது தொடர்பாக காங்கிரஸ் விரைவில் முடிவு அறிவிக்க இருக்கிறது.
இது தொடர்பாக டெல்லியில் நேற்று நடைபெற்ற இறுதி ஆலோசனைக் கூட்டத்தில் ஒரு முக்கிய முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதாவது ஆந்திர மாநிலத்தை பிரித்து தனி தெலுங்கானாவை உருவாக்கி பிற பகுதியின் எதிர்ப்பை சம்பாதிப்பதற்கு பதிலாக மாற்று திட்டத்தை அறிவிக்கலாம் என காங்கிரஸ் கருதுகிறது.
தெலுங்கானாவின் 10 மாவட்டங்களையும் ராயலசீமாவின் பின்தங்கிய மாவட்டங்களான கர்நூல் மற்றும் அனந்தபூர் மாவட்டங்களையும் ஒன்றிணைத்து 'ராயல தெலுங்கானா' என்ற புதிய மாநிலத்தை உருவாக்குவது எனவும் ஆந்திராவுக்கும் ராயல தெலுங்கானாவுக்கும் பொதுதலைநகராக ஹைதராபாத் செயல்படும் என அறிவிக்கவும் காங்கிரஸ் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
டெல்லியில் கூட இருக்கும் காங்கிரஸ் காரிய கமிட்டிக் கூட்டத்தில் ராயல தெலுங்கானா பற்றி விவாதித்து அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications