நாடாளுமன்ற தேர்தலில் ஆட்சியை தீர்மானிப்பது மாநில கட்சிகள்தான்: கருத்துக் கணிப்பு
டெல்லி: மத்தியில் அடுத்து ஆட்சியமைப்பது யார் என்பதை மாநில கட்சிகள்தான் தீர்மானிக்கும் என்று சமீபத்திய கருத்துக் கணிப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது.
நாடாளுமன்ற லோக்சபா தேர்தலில் எந்த கட்சி ஆட்சியமைக்கும் என்பது தொடர்பாக தனியார் ஆங்கில தொலைக்காட்சி ஒன்று கருத்துக்கணிப்பு நடத்தியது.
இதில் ஐ.மு.கூட்டணிக்கோ, தேசிய ஜனநாயக கூட்டணிக்கோ தனிப்பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பே இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சி அமைப்பது யார் என்பதில் பிராந்திய கட்சிகள்தான் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் தெரியவந்துள்ளது.
கருத்துக்கணிப்பில் வெளியிடப்பட்டுள்ள சுவாரஸ்யமான தகவல்களை மேற்கொண்டு படியுங்களேன்.
தே.ஜ. கூட்டணிக்கு 180
இந்த மாதம் லோக்சபா தேர்தல் நடைபெற்றால், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 149 - 157, பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 172 - 180 இடங்கள் கிடைக்கும்.
இடதுசாரிகள் கூட்டணி
பகுஜன் சமாஜ் கட்சி 15 - 19, சமாஜ்வாதி கட்சி 17 - 21 மற்றும் இடதுசாரி கூட்டணி 22 - 18 வரையிலான இடங்களை கைப்பற்றும்.
ஆட்சி அமைப்பது யார்
உதிரிக்கட்சிகள், சிறிய கட்சிகள் 147 - 164 இடங்கள் வரை கைப்பற்றிவிடும். இவைகள்தான் யார் ஆட்சியமைப்பது என்பதை தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுக்கும்.
தொங்கு பாராளுமன்றம்
575 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றத்தில் ஆட்சியமைக்க தேவையான 272 உறுப்பினர்கள் எந்த கட்சிக்கும் கிடைக்காது. தொங்கு பாராளுமன்றம் அமையும் சூழ்நிலைதான் ஏற்படும்.
காங்கிரஸ் கட்சிக்கு
ஐக்கிய முற்போக்கு கூட்டணியை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சி 131 - 139 இடங்கள் வரை கைப்பற்றலாம் என்றும், அதன் கூட்டணி கட்சிகள் 15 - 21 இடங்கள் வரை மட்டுமே கைப்பற்றும்.
பாரதீய ஜனதாவிற்கு
தேசிய ஜனநாயக கூட்டணியிலும் ஏறக்குறைய இதே நிலைதான் காணப்படுகிறது. பா.ஜனதாவுக்கு காங்கிரஸ் கட்சியைவிட சிறிது அதிகமாக 156 -164 இடங்கள் வரை கிடைக்கலாம் என்றும், அதன் கூட்டணி கட்சிகளுக்கு 13 - 19 இடங்கள் வரை கிடைக்கலாம் என்றும் அந்த கருத்துக்கணிப்பு கூறுகிறது.
மமதாவிற்கு 27
பிராந்திய கட்சிகளை பொறுத்தவரை மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 23 - 27 இடங்கள் வரையும் கிடைக்க வாய்ப்புள்ளது.
ஜெயலலிதாவிற்கு 20
தமிழ்நாட்டில் அதிமுக விற்கு 16 - 20 இடங்கள் வரையும் கிடைக்க வாய்ப்புள்ளது. கூட்டணி அமைவதைப் பொறுத்து கூடுதல் இடங்களை கைப்பற்ற வாய்ப்பு.
ஆந்திராவில் ஜெகன்
ஆந்திராவில் ஒய்.எஸ். ஆர். காங்கிரஸ் 11 - 15 இடங்கள் வரையும், தெலுங்கு தேசம் கட்சி 6 - 10 இடங்கள் வரையும், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி 5 - 9 இடங்கள் வரையும்,
பீகார் - ஒடிஷா
பீகாரில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 15 - 19 இடங்கள் வரையும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் 8 - 12 இடங்களிலும் வெற்றி பெறும். அதேபோல் ஒரிஸ்ஸாவில் பிஜூ ஜனதா தளம் 12 - 16 இடங்கள் வரையும் கைப்பற்றும் என அந்த கருத்துக் கணிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யார் பிரதமர்
சிறிய கட்சிகள் மத்தியில் ஆட்சியை தீர்மானிக்கும் பட்சத்தில் யார் பிரதமர் என்பதிலும் கடும் போட்டி நிலவ வாய்ப்புள்ளது என்றே தெரிகிறது.












Click it and Unblock the Notifications