மின்சார ரயிலில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 12 பேர் கைது… கொலை முயற்சி வழக்கு
சென்னை: மின்சார ரயிலில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 12 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது கொலைமுயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் நிலையத்தில் இருந்து நேற்று அரக்கோணத்திற்கு சென்ற மின்சார ரெயிலில் கல்லூரி மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது.
இந்துக் கல்லூரி ரெயில் நிலையத்தில் நின்றபோது ஒரு கும்பல் மாணவர்களை தாக்கியது. பயங்கர ஆயுதங்களுடன் அவர்கள் தாக்கியதில் 5 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். மோதலை தடுக்க சென்ற பயணி ஒருவரும் காயம் அடைந்தார்.
சினிமாவை மிஞ்சும் வகையில் நேற்று பட்டப்பகலில் ரெயிலுக்குள் நடந்த சம்பவத்தைக் கண்ட பயணிகள் பயந்து அலறி ஓடினார்கள். தாக்குதலில் படுகாயம் அடைந்த மாணவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து ஆவடி ரெயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பச்சையப்பன் கல்லூரி பிரசிடென்சி கல்லூரி மாணவர்கள் இடையே இந்த மோதல் ஏற்பட்டது தெரியவந்தது.
இரண்டு கல்லூரி மாணவர்களும் அடிக்கடி மோதிக் கொள்கிறார்கள். குரூப்பாக சேர்ந்து கொண்டு இதில் யார் பெரியவன்? நீ பெரியவனா? நான் பெரியவனா? என்ற போட்டியில் மோதிக் கொண்டதாக கூறப்படுகிறது.
பேருந்தில் மோதல்
கல்லூரி திறக்கப்பட்டதில் இருந்து இந்த மோதல் வலுத்து வந்தது. பஸ்சில் செல்லும் மாணவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு மோதிக் கொண்டனர். இப்போது ரெயிலில் பயணம் செய்யக்கூடிய மாணவர்கள் இடையே இந்த தாக்கம் ஏற்பட்டு மோதலாக உருவெடுத்துள்ளது.
12 பேர் கைது
இந்த மோதலில் ஈடுபட்டவர்களில் 12 பேர் மட்டும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மற்றவர்களை தேடிவருகிறார்கள்.
மாணவர்கள் மோதலில் ஈடுபடுவது விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தெரியாமல் இருக்கிறார்கள். பஸ்களில் அடாவடித்தனம் செய்தனர். இப்போது ரெயிலிலும் செய்ய துணிந்து விட்டனர். பொது சொத்திற்கு சேதம், பொது மக்கள் பாதிப்பு, சட்டம்- ஒழுங்கு பிரச்சினை போன்றவற்றை கருத்தில் கொண்டு மாணவர்கள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
படிக்க வேண்டிய மாணவர்கள் ஆயுதங்களுடன் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ளும் போக்கு அதிகரித்து வருவது பெற்றோர், ஆசிரியர்களை மட்டுமல்ல போலீசாரையும் கவலை அடையச் செய்துள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications