நா உயிரோடத் தான் இருக்கேன், அப்போ யாருக்குடா ‘இறுதிச்சடங்கு’ செஞ்சீங்க..
புவனேசுவரம்: ஒடிசாவில் கொலை செய்யப்பட்டதாகக் கருதி இன்ஜினியரிங் மாணவர் ஒருவருக்கு இறுதிச்சடங்கு செய்யப்பட்ட நிலையில், தற்போது அம்மாணவர் உயிருடன் திரும்பி உள்ளதால், இறுதிச்சடங்கு செய்யப்பட்ட உடல் யாருடையது என்ற குழப்பம் உண்டாகியுள்ளது.
ஒரிசா மாநிலம் காதிதா என்ற கிராமத்தை சேர்ந்த லோசன் காடிதா என்ற 19 வயது இன்ஜியரிங் மாணவரை கடந்த 8ந்தேதி முதல் காணவில்லை என போலீசில் புகாரளித்தார் அவரது தந்தை. இதற்கிடையே அவரது ஊர் அருகே உள்ள காட்டில் இருந்து அழுகிய நிலையில் உடல் ஒன்று கண்டெடுக்கப் பட்டது.
அது லோகனின் உடல் தான் என அவரது தந்தையும் அடையாளம் காட்ட, பிரேத பரிசோதனைக்குப் பிறகு, உரிய இறுதி மரியாதைகளுக்குப் பின்னர் அந்த உடல் உடல் தகனம் செய்யப்பட்டது. பிரேதப் பரிசோதனியில் லோசன் கொலை செய்யப்பட்டது தெரிய வந்ததையடுத்து கொலையாளி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சந்தேகத்தின் அடிப்படையில், லோசனின் ஆறு நண்பர்கள் கைது செய்யப்பட்டனர். மேற்கொண்டு அவர்களிடம் விசாரணை நடந்து வருகையில், திடீரென வீட்டிற்கு வந்தார் லோசன். பூரி ஜெகநாதர் கோவில் திருவிழா பார்க்க சென்றதாகத் தெரிவித்துள்ளார் லோசன்.
லோசன் உயிரோடு திரும்பி வந்த நிலையில், அவரது குடும்பத்தாரால் இறுதிச் சடங்கு செய்யப்பட்டு தகனம் செய்யப்பட்ட உடல் யாருடையது என போலீசார் விசாரணைத் துவக்கியுள்ளனர்.
-
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு?












Click it and Unblock the Notifications