சென்னை வேளச்சேரியில் கருணாநிதி நற்பணி மன்றம் திடீர் இடிப்பு
சென்னை: சென்னை வேளச்சேரியில் திமுகவினரால் நடத்தப்பட்டு வந்த கருணாநிதி நற்பணி மன்றத்தின் அலுவலகம் இடித்துத் தள்ளப்பட்டது.
சென்னை வேளச்சேரி 180 வது வட்டத்தில், 37, அண்ணா தெரு, எம்.ஜி.ஆர். நகரில் கருணாநிதி பெயரில் நற்பணி மன்றம் 20 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது.
இந்த மன்றக் கட்டடத்தை அ.தி.மு.க. வட்டச் செயலாளர் ஜோதி முன்னிலையில், சென்னை மண்டலம் 13ற்கு உள்பட்ட உதவி ஆணையாளர் சம்பத் தலைமையிலான அதிகாரிகள் குழு பொக்லைன் மூலம் மன்ற கொடி கம்பம், பெயர் பலகை, மன்றத்தையும் இடித்து தள்ளினார்.
தகவல் அறிந்த பகுதிச் செயலாளர் இந்திராநகர் மு.ரவி, வட்டச் செயலாளர் கோபி ஆகியோர் தலைமையில் திமுகவினர் குவிந்து அதிகாரிகள், போலீசாரிடம் முறையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து திமுகவினர் கூறுகையில், மன்றக் கட்டடத்தை இடிக்கக் கூடாது என்று கோரி சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் நகலை அதிகாரி சம்பத்குமாரிடம் கொடுத்தோம். ஆனால் அதையும் மீறி, அதிமுகவினரின் தூண்டுதல் பேரில் கட்டடத்தை இடித்துள்ளனர் என்றனர்.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் விளக்குகையில், சட்டப்படி தான் எல்லாவற்றையும் செய்து வருகின்றோம். சட்டத்தை மீறி எதுவும் செய்யவில்லை. செய்யவும் முடியாது. திமுகவினர் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறினால் அவர்கள் நீதிமன்றத்தை தாராளமாக நாடலாம் என்றனர்.
-
சென்னை மக்கள் பொறுமை இழந்தனர்.. கட்டி முடிச்சு 4 மாசமாச்சு.. எப்ப தான் திறப்பீங்க! -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
நடிகர் ரவி மோகனுக்கு பின்னடைவு! ஆர்த்திக்கு ஜீவனாம்சம் வழங்கும் விவகாரத்தில் உயர்நீதிமன்றம் அதிரடி! -
சென்னையில் முதல்வர் விஜய் தொகுதியான பெரம்பூரில் அடிக்கடி மின் வெட்டு.. பொங்கி எழுந்த மக்கள் -
திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய் -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு












Click it and Unblock the Notifications