பிரியாணி சாப்பிட்ட சில மணி நேரங்களில் மருத்துவ மாணவி திடீர் மரணம்...!

ஹோட்டலிலிருந்து இந்த பிரியாணியை வாங்கி அந்த மாணவி சாப்பிட்டுள்ளார். ஆனால் சில மணி நேரங்களில் அவர் உயிரிழந்துள்ளார். புட் பாய்சனிங்கே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
அந்த மாணவியின் பெயர் ரஜிதா ராஜீவ். 19 வயதான இவர் புதுவை ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படித்து வந்தார் இவரது தந்தை பெயர் டாக்டர் பி.ராஜீவ். தாயார் சோஜா. இருவரும் மருத்துவமனைகளில் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் குடும்பத்தோடு கொல்லத்திலிருந்து காரில் திருவனந்தபுரம் திரும்பிக் கொண்டிருந்தனர். வெள்ளிக்கிழமை இரவு, திருவனந்தபுரத்திற்கு முன்பு உள்ள கழக்கூட்டம் என்ற இடத்தில் வந்தபோது பசி எடுத்ததால் சாப்பிடுவதற்காக காரை நிறுத்தினர். அங்குள்ள ஒரு ஹோட்டலில் மூன்று பேரும் சாப்பிட்டுள்ளனர்.
பிரியாணி, அப்பம் உள்ளிட்டவற்றை சாப்பிட்டுள்ளனர். பின்னர் வீடு திரும்பினர். வீடு திரும்பிய சில மணி நேரங்களில் ரஜிதாவுக்கு வாந்தி ஏற்பட்டுள்ளு. கடும் தலைவலியும், வயிற்று வலியும் ஏற்பட்டது. தொடர்ந்து வாந்தி எடுத்தபடி இருந்துள்ளார். வீட்டில் மருந்து கொடுத்துப் பார்த்துள்ளனர். சரியாகவில்லை. இதையடுத்து சனிக்கிழமை காலை அவரை தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு நிலைமை மோசமடைந்தது. இதையடுத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர் வரும்போதே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
ரஜிதா எப்படி இறந்தார் என்பது தெரியவில்லை. பிரியாணிதான் மரணத்திற்குக் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. பிரியாணியால்தான் ரஜிதா இறந்ததாக குற்றம் சாட்டி போலீஸில் புகார் கொடுத்துள்ளனர் குடும்பத்தினர்.
சம்பவ ஹோட்டலிலிருந்து அன்றைய தினம் இரவில் கிட்டத்தட்ட 500 பேர் வரை பிரியாணி சாபப்பிட்டுள்ளாக தெரிகிறது. ஆனால் யாரும் புகார் ஏதும் சொல்லவில்லை என்று போலீஸார் கூறுகின்றனர்.
சம்பந்தப்பட்ட ஹோட்டலில் உணவுத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். தற்காலிகமாக ஹோட்டல் உரிமமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஹோட்டலில் சுகாதாரக் குறைவு ஏதும் இல்லை என்றும் பாதுகாப்பான முறையில்தான் உணவு தயாரிக்கப்படுவதாகவும் கண்டறிந்துள்ளனராம்.
மாணவியின் மரணம் சர்ச்சையையும், மர்மத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications