ஆன்லைனில் ஓட்டுப் போடும் முறை அவசியமாகிறது..: மோடி வலியுறுத்தல்

செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், தற்போதைய காலம் என்பது தகவல் தொழில்நுட்பம் மற்றும் அறிவுசார்ந்தது. எந்த ஒரு தனிநபரும் அல்லது தனி அமைப்பும் இந்த விவகாரத்தில் உரிமை கொண்டாடிக் கொண்டிருக்க முடியாது. இது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு அரசியல் தலைவரும் நாட்டின் இளைஞர்களுடன் தொடர்புகொள்ள வேண்டிய அவசியத்தை உருவாக்கியிருக்கிறது.
சமூக வலைதளங்களான ட்விட்டர், ஃபேஸ்புக்கைப் போல யூ டியூப்பும் அற்புதமான ஒன்று. பல்வேறு முக்கிய சம்பவங்கள் இத்தகைய சமூக வலைதளங்களில்தான் உடனடியாக வெளியாகின்றன. அண்மையில் உத்தர்காண்ட் பேரழிவு சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருந்தது. காணாமல் போன உறவினர்களை மீட்பதில் இந்த சமூக வலைதளங்கள் பெரும்பங்கு வகித்தன.
இத்தகைய சமூக வலைதளங்களை எந்த ஒரு தனிநபரும் அமைப்பும் கட்டுப்படுத்திவிட முடியாது. அண்மையில்கூட மும்பை ஹோட்டலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு எதிராக பில்லில் வாசகங்கள் இடம்பெற்ற சம்பவம் ஒரு செய்தித்தாளில் வந்தது. ஆனால் அந்த பிரச்சனை சமூக வலைதளத்தில் அதிகம் பேசப்பட்டது.
அதே நேரத்தில் சமூக வலைதளங்களை நாம் பயன்படுத்தும் போது நமது கலாசாரம் பண்பாடு ஆகியவற்றையும் மறந்துவிடக் கூடாது. எத்தனை நவீன வசதிகள் வந்தாலும் பெண்களை தெய்வமாக மதிப்பது நமது சமூகம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
தற்போதைய நவீன தொழில்நுட்ப வசதிகளுக்கேற்ப நமது தேர்தல் முறைகளும் மாற்றியமைக்கப்பட வேண்டும். அண்மையில் கூட தேர்தல் சீர்திருத்தங்கள் பற்றிய எனது உரையில் இதனைக் குறிப்பிட்டிருந்தேன். நாட்டின் ஜனநாயக நடைமுறைகளில் இளைஞர்களின் பங்கேற்பை உறுதி செய்யும் வகையில் சமூக வலைதளங்களையும் பயன்படுத்த வேண்டும். தகவல் தொழில்நுட்பம் என்பது விஸ்வரூபமாகிவிட்டது. இதனால் ஆன்லைனில் வாக்களிப்பது, வேட்பாளர்களை நிராகரிப்பது போன்றவற்றை உள்ளடக்கிய தேர்தல் சீருத்தங்கள் இப்போது அவசியமாகிறது என்று கூறியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications