தெலுங்கானா விவகாரம்: ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி பதவி விலகல்?

ஆந்திராவில் தெலங்கானா விவகாரம் கடந்த 2009ம் ஆண்டில் இருந்தே மீண்டும் தீவிரமடைந்துள்ளது. சில மாதங்கள் அமைதியாக இருந்த பிரச்னை மீண்டும் தலைதூக்கியுள்ளது.. தெலங்கானா விவகாரம் தொடர்பாக, ஆந்திர காங்கிரஸ் தலைவர்களிடையே கருத்து மோதல் நீடிப்பதால் இறுதி முடிவுக்கு வர முடியாமல் மத்திய அரசும், காங்கிரஸ் கட்சியும் தவிக்கின்றன.
தெலங்கானா பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.க்களும், எம்.எல்.ஏ.க்களும், தனித் தெலங்கானா அறிவிப்பை உடனே வெளியிட வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில், மத்திய அமைச்சர்கள் பள்ளம் ராஜு, கே.எஸ்.ராவ், சிரஞ்சீவி, ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி ஆகியோர் பிரதமர் மன்மோகன் சிங்கையும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் நேரில் சந்தித்து தெலங்கானா மாநிலம் அமைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தெலங்கானா தனி மாநிலம் அமைப்பது தற்கொலைக்கு சமம் என்று ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி, சோனியாவிடம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், தனது பதவி விலகல் கடிதத்தையும் வெள்ளியன்றே, சோனியாவிடம் அவர் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. தெலங்கானா தனித் மாநிலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திர முதல்வர் பதவி விலகியுள்ளதாக வெளியாகும் வரும் தகவல் ஆந்திர அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதெல்லாம் இல்லை
அதேசமயம் முதல்வர் கிரண்குமார் ரெட்டி ராஜினாமா பற்றி விவாதிக்க வில்லை என்று பழங்குடியின நலத்துறை அமைச்சர் பசுபதி பாலராஜூ கூறியுள்ளார். கேபினட் அமைச்சர்களிடமோ, சீமாந்தரா எம்.பிக்களிடமோ கூட ராஜினாமா பற்றி தெரிவிக்கவில்லைஎன்றும் அவர் கூறியுள்ளார். மாநிலப்பிரிவினையால் ஏற்படும் சிக்கல்கள் பற்றிதான் காங்கிரஸ் தலைமையிடம் பேசினார் என்றும் அவர் கூறியுள்ளார்.
இறுதி முடிவு
கூட்டத்தில் பங்கேற்ற மூத்த தலைவர்களான திக் விஜய் சிங் மற்றும் குலாம் நபி ஆசாத் ஆகியோர், ராயலசீமாவை உள்ளடக்கிய தனித் தெலங்கானா உருவாக்குவது பற்றி தலைவர் சோனியா காந்தி இறுதி முடிவு எடுத்து விட்டதாகவும், அம்மாநில முதலமைச்சர் என்ற முறையில் கட்சியின் முடிவை செயல்படுத்த ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் கிரண்குமாரிடம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. எனினும், இதில் தனக்கு உடன்பாடில்லை என கிரண் குமார் கூறியதாகவும், இதையடுத்து சோனியாவை சந்தித்து இதுபற்றி விளக்கும்படி, ஆசாத் அவரிடம் அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
ராயல தெலுங்கானா
இதனிடையே 10 மாவட்டங்களை உள்ளடக்கிய தனித் தெலுங்கானாதான் தங்களுக்கு வேண்டும் என்று டி.ஆர்.எஸ் கட்சி மீண்டும் வலியுறுத்தியுள்ளது. ராயலசீமாவையும் சேர்த்து ராயல தெலுங்கானாவை நாங்கள் கேட்கவில்லை என்று கூறியுள்ளனர். தங்களின் தெலுங்கானாவிற்கு ஹைதராபாத் நகரை தலைநகரமாக அறிவிக்க வேண்டும் என்பதும் டி.ஆர்.எஸ் கட்சியினரின் கோரிக்கையாகும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications