மேட்டூர் அணை ஆக.2-ந் தேதியே திறப்பு- முதல்வர் ஜெ. உத்தரவு!

மேட்டூர் அணை வழக்கமான ஜூன் மாதம் திறக்கப்படும். ஆனால் நடப்பு ஆண்டில் கர்நாடகா போதுமான நீரை திறந்துவிடாத நிலையில் ஜூன் மாதம் அணை திறக்கப்படவில்லை.
தற்போது கர்நாடகாவில் கனமழை பெய்துவருகிறது. தமிழகத்துக்கு நீர் திறந்துவிடப்படக் கூடிய கிருஷ்ணராஜசாகர், கபினி உள்ளிட்ட அனைத்து அணைகளும் நிரம்பி வழிகின்றன. தமிழகத்துக்கு 1 லட்சத்துக்கும் அதிகமான கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டமும் 100 அடியை தாண்டிவிட்டது.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு நடுத்தர சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணை 12-ந் தேதி திறக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதாக் 10 நாட்கள் முன்னதாக ஆகஸ்ட் 2-ந் தேதியே அணை திறக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
மேலும் மேட்டூர் அணையில் இருந்து தற்போது திறக்கப்படும் 6 ஆயிரம் கன அடிநீர் அளவை 10 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்படும் என்றும் ஜெயலலிதா தமது அறிக்கையில் கூறியுள்ளார்.
இதனால் காவிரி டெல்டா பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications