நான் இப்படிப் பேசினா உடனே அதிமுகவுக்கு ஜால்ரான்னு சொல்லிடுறாங்க.. சரத் விசனம்

சென்னையில் காமராஜர் பிறந்த நாள் விழா, கட்சித் தலைவரான சரத்குமார் பிறந்த நாள் விழா, நலத்திட்ட உதவிகள் விழா என முப்பெரும் விழாவை நடத்தியது சமத்துவ மக்கள் கட்சி.
சரத்குமாரை புதிததாக புரட்சித் திலகம் என்ற அடைமொழியிட்டு இந்த விழாவுக்கு வரவேற்றனர் தொண்டர்கள். விழாவில்சரத்குமார் பேசுகையில்,
மாற்றம் வேண்டும் என்று நாம் சொல்லி வருகிறோம். மாற்றம் எளிதாக வருவதல்ல. பதவியில் அமர்ந்துவிட வேண்டும் என்பது நமது எண்ணம் அல்ல. அனைவராலும் நேசிக்கப்படும்போதுதான் ஒருவனால் தலைவனாக முடியும்.
மாற்றம் என்பது ஒவ்வொருவரின் சிந்தனையிலும் வர வேண்டும். அதற்காக நீங்கள் சிந்திக்க வேண்டும். அதற்கான காலத்தில் நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம். நான் மனசாட்சிக்கு கட்டுப்பட்டவன். அதனால், கடவுளை தவிர யாருக்கும் பயப்பட மாட்டேன்.
தமிழகத்தில் நல்லாட்சி நடந்து கொண்டிருக்கிறது. அதற்கு நாம் உறுதுணையாக இருக்க வேண்டும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஒரு இடம் கூட கிடைக்கக் கூடாது. நான் இவ்வாறு பேசினால், அதிமுகவுக்கு ஜால்ரா அடிப்பதாக சொல்வார்கள்.
மக்களுக்கு நல்லது செய்யும்போது அதை பாராட்ட வேண்டும். வரும் நாடாளுமன்ற தேர்தலை நோக்கி நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம். நம் இயக்கத்தில் உள்ளவர்கள் உறுதியோடு செயல்பட வேண்டும். நம் கட்சிக்கு என்று ஒரு காலம் உள்ளது. அப்போது நாம் பார்த்துக்கொள்வோம். அதுவரை மக்களின் வளர்ச்சிக்காக செயல்படுவோம்.
செப்டம்பர் மாதம் முதல் நான் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்க உள்ளேன். வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றிபெற வேண்டும் என்றார் அவர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications