ஸாரி பார் யுவர் லைப்... குட்பை... கணவருக்கு கடிதம் எழுதி விட்டு பெண் தற்கொலை
சென்னை: என்னை பொறுக்கி என்று நினைத்து பேசக்கூடாத வார்த்தைகளால் போனில் திட்டினீர்கள். இனிமேல் நான் இருக்க போவதில்லை. நீங்கள் எங்கேயும் என்னை கூட்டி செல்ல வேண்டிய அவசியமும் இல்லை. ஸாரி, பார் யுவர் லைப், குட் பை என்று கடிதம் எழுதி வைத்து விட்டு ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் குருசுப்பிரமணியன். இவரது மனைவி பெயர் சரிகா, 24 வயதாகிறது. இவர்களுக்கு ராமநாதபுரம்தான் சொந்த ஊர். இந்தத் தம்பதிக்கு அகில் காளீஸ்வரன் என்ற குழந்தை உள்ளது. இக்குழந்தைக்கு அடுத்த மாதம் முதலாவது பிறந்த நாள் வருகிறது.
இதை குடும்பத்தார், உற்றார் உறவினர்களை அழைத்து சிறப்பாகக் கொண்டாட ஆசைப்பட்டார் சரிகா. இதுதொடர்பாக கணவன் மனைவி பேசிக் கொண்டிருந்தபோது திடீரென தகராறு வெடித்தது. பேச்சின்போது, உன் அப்பா, அம்மாவை அழைக்கக் கூடாது என்று குருசுப்பிரமணியன் சொல்ல, அப்படிச் செய்தால் உங்க அப்பா, அம்மாவும் வரக் கூடாது என்று சரிகா பதிலடி தர இருவருக்கும் சண்டையாகி விட்டது.
சண்டையின்போது தடித்த வார்த்தைகள் பரிமாறப்பட்டதாக தெரிகிறது. இதனால் மனம் உடைந்த சரிகா அறைக்குள் போய் விட்டார். அங்கு கணவருக்கு கடிதம் எழுதி வைத்து விட்டு தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
போலீஸார் சரிகாவின் கடிதத்தைக் கைப்பற்றினர். அதில், என்னை பொறுக்கி என்று நினைத்து பேசக்கூடாத வார்த்தைகளால் போனில் திட்டினீர்கள். இனிமேல் நான் இருக்க போவதில்லை. நீங்கள் எங்கேயும் என்னை கூட்டி செல்ல வேண்டிய அவசியமும் இல்லை. சாரி, பார் யுவர் லைப், குட் பை என்று எழுதப்பட்டிருந்தது.
போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications