கூர்க்காலாந்து தனி மாநிலம் கோரி 2வது நாளாக முழு அடைப்பு- ஒருவர் தீக்குளிக்க முயற்சி!
டார்ஜிலிங்க்: தெலுங்கானா போல கூர்க்காலாந்து தனி மாநிலம் கோரி 2வது நாளாக முழு அடைப்புப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது. இன்றைய முழு அடைப்பின் போது தனி மாநிலம் கோரி ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மேற்குவங்க மாநிலத்தில் இருந்து டார்ஜிலிங் மலை பிரதேசத்தை பிரித்து தனி மாநிலம் அமைக்கக் கோரி பல ஆண்டுகளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. தற்போது தெலுங்கானா தனி மாநிலம் அமைக்கப்படும் என்ற நிலையில் கூர்க்காலாந்து கோரிக்கையும் தீவிரமடைந்துள்ளது. நேற்று முதல் 3 நாள் முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
டார்ஜிலிங் உள்ளிட்ட கூர்க்காலாந்து பகுதிகளில் நேற்றைப் போல இன்றும் முழு அளவில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தன. அரசு அலுவலகங்கள் இயங்கவில்லை. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முழுமையாக பாதிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே கலிம்போங் என்ற இடத்தைச் சேர்ந்த மங்கல்சிங் ராஜ்புத் என்ற நபர் திடீரென தனி மாநிலம் கோரி தமது உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உடனே சம்பவ இடத்தில் இருந்த போலீசார் விரைந்து சென்று அவரது உடலில் பரவிய தீயை அணைத்து மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தொடர்ந்தும் கூர்க்காலாந்து பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications